SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தலைநிமிரும் தமிழகம்

2021-09-08@ 00:54:28

தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்று 5 மாதங்கள்தான் கடந்துள்ளது. ஆனால் அண்டை மாநிலங்கள் அத்தனையும் பின்பற்றும், அனைத்து மாநில தலைவர்களும் பாராட்டும் மிகச்சிறந்த திட்டங்களையும், தொலை நோக்கு பார்வை கொண்ட சிந்தனையும், மக்கள் நல அறிவிப்புகளாலும் தமிழமே தலைநிமிர்ந்து வருகிறது என்றால் மிகையல்ல. தமிழகத்தின் இன்றைய கடன் ஒட்டுமொத்தமாக ரூ.5.75 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது. ஏராளமான நிதிச்சுமைகள் இருந்தும் அசரவில்லை முதல்வர். எடுத்த எடுப்பிலேயே கொரோனா நிதியாக அத்தனை ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ.4 ஆயிரம் வழங்கி நிவாரணம் அளித்து இருக்கிறார்.

கச்சா எண்ணெய் விலையின்படி ஒருலிட்டர் ரூ.50க்குள் விற்க வேண்டிய பெட்ரோலை ரூ.101 தாண்ட வைத்து சாதனை படைத்தது ஒன்றிய அரசு. ஆனால் தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற லிட்டருக்கு ரூ.3 குறைத்து சாதித்திருக்கிறது திமுக அரசு. அதோடு நின்றுவிடவில்லை. அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று நிதிச்சுமை இருந்தாலும், பெரும் பற்றாக்குறை வந்தாலும் வரும் ஜனவரி முதல் அகவிலைப்படி வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார். மேலும் கல்வித்தகுதிக்கு ஏற்றார்போல் வழங்கப்படும் ஊக்கத்தொகையும் வழங்க நடவடிக்கை என்று உற்சாகப்படுத்தி இருக்கிறார்.

பள்ளி பாடப்புத்தகங்களில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி படங்களை நீக்காமல் அப்படியே வழங்க உத்தரவிட்டது, ஆசிரியர் விருது சான்றிதழில் முதல்வரான தனது படம் இடம்பெறாமல், டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்தை மட்டும் இடம் பெற செய்ய உத்தரவிட்டது என்று வாக்களிக்காத உள்ளங்களையும் வாழ்த்த வைத்துவிட்டார். இந்த 5 மாதங்களில் திமுக அரசின் சமூக நீதிப்பயணத்தை இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். 75வது சுதந்திரதின கொண்டாட்ட புகைப்படங்களில் நாட்டின் முதல் பிரதமர் நேரு படத்தை ஒன்றிய அரசு நீக்கியது. ஆனால் அரசியல் எதிர்ப்புகளை கடந்து, தமிழகத்தின் நலன் கொண்டு சிந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினை இந்த விஷயத்தில் சிவசேனை கட்சி இந்தியாவின் உதாரணமாக காட்டியிருக்கிறது.

அந்த அளவுக்கு தமிழகத்தின் தலைமகனாம் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு மாநிலங்களிலும் உற்றுநோக்கப்படுகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய சமூக நீதிக்காவலரும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை, எளிய மக்கள் வாழ்வுக்காக தனது வாழ்க்கையையே போராட்ட களமாக மாற்றிய தனிப்பெரும் தலைவருமான கலைஞரின் வழிநடத்துதலில், அவரின் கண்பார்வையில், 1967ம் ஆண்டு முதல் கட்சிப்பணிகளிலும், ஆட்சி பணிகளிலும் வார்த்து எடுக்கப்பட்டவர் அல்லவா நமது முதல்வர். அதோடு கலைஞரின் கணீர் குரலால்,’ மு.க.ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு’ என்ற பாராட்டையும் பெற்றவர் அல்லவா. அப்படிப்பட்டவரின் வழிநடத்துதலில், அவரது கடுமையான உழைப்பில் , சமூகத்தின் அத்தனை தரப்பு மக்களுக்காகவும் தீட்டப்படும் திட்டங்களில் தமிழகம் இனிமேல் புதிய உச்சத்தை நிச்சயம் தொடும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

 • tajmahal-love

  தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்