SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆன்லைனில் மது கிடையாது, டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 500 ஊதிய உயர்வு, விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள் :அமைச்சர் செந்தில் பாலாஜி

2021-09-07@ 15:53:01

சென்னை : டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ. 500 தொகுப்பு ஊதியம் கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு,

*எந்த நிலையிலும் ஆன்லைன் மூலம் மதுவிற்பனை இல்லை.

*டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ. 500 தொகுப்பு ஊதியம் கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும். ரூ . 500 தொகுப்பு ஊதியம் வழங்குவதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.15.01 லட்சம் கூடுதல் செலவாகும்.

*பல்வேறு மாவட்டங்களில் 7,500 மெகாவாட் மொத்த நிறுவுதிறன் கொண்ட 11 புதிய நீரேற்று மின் திட்டங்கள் அமைக்கப்படும்.

*உடன்குடி விரிவாக்க திட்டம் -2,3 அனல் மின் உற்பத்தி திட்டங்களை செயலாக்கத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

*ரூ. 1979 கோடி மதிப்பீட்டில் 159 புதிய துணை மின் நிலையங்களை நிறுவ திட்டம்.

*வேளாண் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும்.

*வடசென்னையில் 2 லட்சத்து 38 மெட்ரிக் டன்னும், தூத்துக்குடியில் 71,000 டன் நிலக்கரி காணாமல் போயுள்ளது.

*தமிழகத்தில் தொழில்நுட்பம், வர்த்தக ரீதியிலான அடிப்படையில் சூரிய மின் சக்தி பூங்கா நிறுவப்படும். 4000 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம், 2000 மெகாவாட் சேமிப்பு திட்டத்துடன் நிறுவப்படும்.

*சென்னை மாநகரம் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட சென்னை மாநகர பகுதிகளில் மேல்நிலை மின்பாதைகளை புதை வடங்களாக மாற்றப்படும்.

*ரூ. 12.5 கோடி மதிப்பீட்டில் 110 கிலோ வாட் துணை மின் நிலையங்கள் தரம் உயர்த்தல்.

*ரூ. 679 கோடி மதிப்பீட்டில் புதிய மின்மாற்றிகள் மற்றும் திறன் மேம்படுத்துதல்.

*ரூ. 50 கோடி மதிப்பீட்டில் வடசென்னை அனல் மின் நிலையம்   2ல் உலர் சாம்பலை வெளியேற்றும் அமைப்பு அமைக்கப்படும்.

*ரூ.1,979 கோடி மதிப்பீட்டில் 159 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவப்படும். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

    திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

  • Marinaa

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

  • robo-student-scl-20

    நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7 வயது மாணவருக்கு பதிலாக பள்ளிக்கு செல்லும் ரோபோ..!!

  • oil-spill-peru-20

    பெரு நாட்டில் எண்ணெய் கசிவு காரணமாக கடல் பகுதி பாதிப்பு!: தங்க நிறத்தில் ஜொலித்த கடற்கரை கறுப்பு நிறத்தில் காட்சி..!!

  • af-earthquake-19

    ஆப்கனுக்கு மற்றொரு அடி! அடுத்தடுத்து நிகழ்ந்த மிக மோசமான நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி 26 பேர் பலி, பலர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்