கோடியக்கரை அருகே நடுக்கடலில் நாகை மீனவர்கள் 7 பேரை தாக்கி வலை, செல்போன்கள் பறிப்பு: இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்
2021-09-06@ 00:30:53

நாகை: கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் 7 பேரை தாக்கி வலை, வாக்கி டாக்கி, செல்போன்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றனர். நாகை கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ரவீந்திரன்(28), கிருஷ்ணராஜ் (55), வேல்முருகன் (35), செல்வம் (18) ஆகிய 4 பேர் ஒரு பைபர் படகிலும், அதே பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (40). அமர்நாத்(45), அகிலன்(20) ஆகியோர் ஒரு பைபர் படகிலும் நேற்று முன்தினம் காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
மாலை 6 மணியளவில் கோடியக்கரை தென்கிழக்கே 12 மைல் நாட்டிக்கல் தூரத்தில் 2 பைபர் படகுகளிலும் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அந்த வழியாக படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள்உருட்டு கட்டையால் மீனவர்களை சரமாரியாக தாக்கினர். பின்னர் கத்திகளை காட்டி மிரட்டி 2 படகுகளில் இருந்த 1,000 கிலோ எடையுள்ள வலைகள், 2 செல்போன், 2 வாக்கி டாக்கி, பேட்டரி, திசைகாட்டும் கருவியை பறித்து கொண்டு சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம். இந்த தாக்குதலில் ரவீந்திரன், கிருஷ்ணராஜ், வேல்முருகன் ஆகியோர் காயமடைந்தனர்.
இதைதொடர்ந்து மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். காயமடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை நாகை எம்எல்ஏ முகமது ஷா நவாஸ், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கவுதமன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். கடந்த ஒருவாரத்தில் 3 முறை இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வேதாரண்யம் கடலோர காவல்படை குழும போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Tags:
Kodiakkarai Mediterranean Naga fishermen 7 people attacked nets cell phones flush Sri Lankan pirates கோடியக்கரை நடுக்கடலில் நாகை மீனவர்கள் 7 பேரை தாக்கி வலை செல்போன்கள் பறிப்பு இலங்கை கடற்கொள்ளையர்கள்மேலும் செய்திகள்
வடக்கிபாளையம் பிரிவு மேம்பால பக்கவாட்டு சுவரில் தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை
ஊழல் தலை விரித்தாடுகிறது: திட்டங்களை தட்டிப்பறிப்பதாக விவசாயிகள் வேதனை
தொடர் மழை எதிரொலி; ஏற்காடு மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறை: பொக்லைன் கொண்டு அகற்றம்
அந்தரத்தில் மிதந்தபடியே ஏரியின் எழிலை ரசிக்கலாம்: கொடைக்கானலில் ஜிப் லைன் சுற்றுலா அறிமுகம்
கீழடியில் இரும்பு துண்டுகள் உருக்கு கழிவுகள் கண்டெடுப்பு
இயற்கை எரிவாயு இணைப்புக்கு சேலத்தில் குழாய் பதிப்பு தீவிரம்: விரைவில் வீடுகளுக்கு வழங்க முடிவு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்