SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் மகளிர் சிறை வார்டர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-09-04@ 00:05:05

‘‘மகளிர் சிறை வார்டர்கள் எஸ்.ஐ.யை மிரட்டினாங்களாமே...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி  நகரில் உள்ள லேடீஸ் ஜெயிலில் 80 கைதிகள் இருக்காங்க. சேலம் சரகத்தில்  குற்றவழக்கில் கைதாகுற பெண்களை, இந்த ெஜயிலுக்கு தான் கொண்டு வரணும்.  இதுமாதிரி ஒரு பெண் கைதியை, இரவு 11 மணிக்கு மாங்கனி காக்கி லேடி  கான்ஸ்டபிள்களுடன் எஸ்.ஐ. ஒருவரும், ஜெயிலுக்கு கூட்டிக்கிட்டு போயிருக்காரு.  அங்க அவங்கள 1 மணி நேரம் உக்கார வச்ச லேடி வார்டர்கள், மப்டியில் இருந்து  காக்கி யூனிபார்முக்கு மாறியிருக்காங்க. அப்புறமா தூக்க கலக்கத்துல வந்து,  கைதிக்கு மாத்து உடையும், பிரஷ், சோப்பும் வாங்கிட்டு வாங்கன்னு  சொல்லியிருக்காங்க. ‘‘ஏம்மா இவ்வளவு நேரம் காக்க வைக்கிறீங்களே... இது  நியாயமா? இந்த நேரத்துல போய் எந்த பொருளை வாங்குவோம்’னு அந்த அதிகாரி  கேட்டிருக்காரு. இதனால கோபத்தின் உச்சத்துக்கே போன  வார்டர்கள், யாருகிட்ட  என்ன கேக்குறீங்கன்னு உள்ளே போயிட்டு உக்கிரமா திரும்பி வந்திருக்காங்க.  ‘‘நீங்க கூட்டிக்கிட்டு வந்த பெண் கைதி கிட்ட ஹான்ஸ் இருக்குது..  ரிப்போர்ட்டுல எழுதட்டுமான்னு மிரட்டியிருக்காங்க.

ஏற்கனவே லேடி  கான்ஸ்டபிள வச்சி சோதனை செஞ்சுட்டு தானே உள்ளே கூட்டிக்கிட்டு போனீங்க..  இப்போ எப்படி ஹான்ஸ் வந்திச்சுன்னு எஸ்ஐ எதிர் கேள்வி கேட்டிருக்காரு.  அதுக்கு ‘‘இனிமே வந்தோமா, போனோமான்னு இருக்கணும். கொஸ்டீன் கேட்குற வேலை  எல்லாம் இருக்க கூடாது’னு வார்னிங் பண்னாங்களாம் வார்டர்கள். 25 வருஷ  அனுபவத்துல இப்படி ஒரு மிரட்டலை நான் பார்த்ததே இல்ல, வேதனையோட அந்த  அதிகாரி இடத்த காலி பண்ணியிருக்காரு. இந்த மிரட்டல் விவகாரம், மாநகர காக்கி  அதிகாரிகளின் காதுக்கு போயிருக்கு. கைதிகளை கூட்டிக்கிட்டு வரும் எல்லா  அதிகாரிகளையும் இப்படித்தான் நடத்துவாங்களாம் லேடீஸ் ஜெயில் வார்டர்கள்.  இந்த விவகாரத்துல நமக்கு ஒரு நேரம் கிடைக்காமலா போயிடுமுன்னு காக்கிங்க  காத்திட்டிருக்காங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘கடந்த ஆட்சியில் சொகுசாக பணியில் இருந்து மாறுதலாகி சென்ற ஆணையரால் நகராட்சிக்கு வருவாய் கிடைப்பதில் தொய்வு ஏற்பட்டிருக்கிறதாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் 2 நகராட்சிகள் உள்ளது. இதில் கடலோர நகராட்சியில் கடந்த இலை ஆட்சியில் துப்புரவு பணியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், வருவாய் ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே இருந்ததாம்... இதனால் தூய்மை பணி, வரிவசூலிப்பது சவாலாக இருந்து வந்தது. இதனால் நகராட்சி வளர்ச்சி பெறாமல் பின் தங்கி இருந்தது. மாவட்டத்தில் அமைச்சராக சைரன் காரில் வலம் வந்த மணியானவர், ஆதரவாளர்கள், ரத்தத்தின் ரத்தங்கள் தான் வளர்ச்சி பாதைக்கு சென்றதை காண முடிந்தது. நகராட்சி ஆணையராக இருந்த மாஜி அமைச்சரின் விசுவாசியான கடைசி எழுத்தான ராஜ் பெயரானவரும் நகராட்சி வளர்ச்சி பெற எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லையாம்.. ஆணையர் இருக்கைக்கே மாதந்தோறும் லம்பா ஒரு கமிஷன் சென்றதால் களத்தில் இறங்கி எந்த பணியும் செய்ய வில்லையாம். அறையில் சொகுசாக இருந்ததோடு சைலண்டா ஒரு சொகுசு பங்களாவும் கட்டி விட்டாராம். ஆனால்... பின் தங்கி இருந்த நகராட்சி கடைசியில் ஆட்சி முடியும் நேரத்தில் கூட வளர்ச்சி பெற வில்லை. ஆணையரும் மாறுதலாகி சென்று விட்டார்.

கடந்த 10 வருட ஆட்சியில் நகராட்சி அலுவலர்கள் எப்படி பணியில் இருந்தார்களோ தற்போது ஆட்சி மாறியும் அதேபோல் தான் மந்தமாக பணியாற்றி வருகிறார்களாம்.. இதனால் நகராட்சிக்கு போதிய வருவாய் கிடைப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தூய்மை பணி, முறையான வரி வசூலிக்காதது குறித்து புகார்கள் புதிதாக வந்துள்ள நகராட்சி பெண் அதிகாரிக்கு சென்றதாம்.. முறையாக வரிவசூல், தூய்மை பணிகளில் ஈடுபட வேண்டிய அலுவலர்கள் புகார் தெரிவிக்கும் பொதுமக்களையே குற்றம்சாட்டி விட்டு பணிகளை தட்டி கழிப்பதிலேயே முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘குடியிருப்பு பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடக்குதாமே..’’ ‘‘கடலை  பெயரில் கொண்ட ஊர் தற்போது தான் நகராட்சியில் இருந்து மேயர் அந்தஸ்து  பெற்றதாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் புதுச்சேரிக்கு அருகில்  இருப்பதால் ஏற்கனவே போலி மதுபான சரக்குகள் விற்பனை கொடிகட்டி பறக்கிறது.  

இந்த நிலையில் நகர பகுதியிலேயே கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடப்பது  பொதுமக்கள் மத்தியில் முகச்சுளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நகரின் முக்கிய  பகுதியான கட்டிடங்கள் நிறைந்த புதுப்பாளையம் மணலி எஸ்டேட் பகுதியில் எந்த  நேரத்திலும் கள்ளச்சாராயம் கிடைக்கிறது. தற்போது புதுவையில் கொரோனா வரி  போட்டதால் சாராயம் மற்றும் சரக்கு விலை அதிகமாக உள்ளது. இதனால் மணலி  எஸ்டேட் பகுதிக்கு குடிமன்னர்கள் படையெடுக்கின்றனர். சிலர் அங்கேயே  குடித்துவிட்டு ஆபாசமாக அர்ச்சனை செய்வது அப்பகுதி பெண்களை வேதனையடைய  செய்துள்ளது. சாராய விற்பனை தெரிந்தும் புதுநகர் போலீசார் நடவடிக்கை  எடுக்காததற்கு காரணம் மாமூல் தான் என்கின்றனர் நகரவாசிகள். பட்டப்பகலில்  அதுவும் குடியிருப்பு நிறைந்த பகுதியில் கலெக்டர், எஸ்பி இருக்கும் ஊரில்  எப்படி கள்ளச்சாராயம் விற்பனை கொடிக்கட்டி பறக்கிறது என்பது அப்பகுதி  மக்களின் புரியாத புதிராக உள்ளது என புலம்புகின்றனர்’’ என்றார்  விக்கியானந்தா.                 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

 • cryingroom-19

  இனி வீட்டில் அழுகாதீங்க!: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்