இலங்கையில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரிப்பு!!
2021-09-02@ 15:03:06

கொழும்பு : இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமானதால் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கால சுற்றுலாத் துறை முடங்கியதை அடுத்து இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி பற்றாக்குறையால் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அந்நாட்டில் சக்கரை, அரிசி உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு அவற்றின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.
சாதாரண மக்கள் உண்ணும் நாட்டரிசி ரகத்தில் விலை ஒரு கிலோவுக்கு 2.5 மடங்கு உயர்ந்துள்ளது.ரூ. 60ல் இருந்து ரூ. 80 வரை விற்கக்கூடிய ஒரு கிலோ நாட்டரிசி விலை தற்போது ரூ.140க்கு மேல் உயர்ந்துவிட்டது.இலங்கையில் கேரள அரிசி ஒரு கிலோ ரூ.135க்கும் சம்பா அரிசி ரூ.140க்கும் விற்கப்படுகிறது. பால் பவுடருக்கும் இலங்கையில் தட்டுப்பாடு நிலவுவதால் அதன் விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது.ரூ. 350க்கு விற்கப்பட்ட 400 கிராம் பால்பவுடர் தற்போது ரூ.1000க்கு விற்கப்படுவதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.இலங்கையில் ரூ. 80க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ சர்க்கரை தற்போது ரூ. 240க்கு விற்கப்படுகிறது.இலங்கையில் ரூ.350க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ உளுந்தம் பருப்பு தற்போது ரூ.1050க்கு விற்கப்படுகிறது.ஒரு கிலோ பச்சைப்பயிறு விலை ரூ.150ல் இருந்து தற்போது ரூ. 850 ஆக அதிகரித்துவிட்டது.இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் ரூ. 7000க்கு விற்கப்படுவதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொருளாதார அவசர நிலையை அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ஷே அமல்படுத்தியுள்ளார்.அரிசி, சக்கரை மற்றும் இதர உணவு பொருட்களை பதுக்குவோருக்கு கடுமையாக தண்டனை அளிக்கவும் அவற்றின் விலைகளை கட்டுப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உணவு பொருட்களின் விநியோகத்தை ஒழுங்குப்படுத்த அத்தியாவசிய பண்டங்களுக்கான ஒழுங்குமுறை ஆணையராக ராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்உணவு பற்றாக்குறையால் கடைகளின் முன்பு நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.அந்நிய செலாவணி பற்றாக்குறையை சமாளிக்க வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இறக்குமதியை இலங்கை அரசு தடை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. .
மேலும் செய்திகள்
சீனாவில் பரவி வரும் புதிய வகை வைரஸ் தொற்று: விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக தகவல்
காங்கோவில் சிறைக்குள் புகுந்து கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி..750 கைதிகள் தப்பியோட்டம்..!!
இந்தியாவின் கடும் எதிர்ப்பு, தடைகளை மீறி சீனாவின் உளவு கப்பல் இன்று இலங்கை வருகை: 750 கிமீ நோட்டமிடும் என்பதால் உஷார்நிலை
விண்வெளியில் சுற்றும் ராக்கெட் உதிரி பாகங்கள் தலையை பதம் பார்க்கும்: 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆபத்து
டிவிட்டர் வழக்கு செலவுக்காக ரூ.55 ஆயிரம் கோடி பங்குகள் விற்பனை: எலான் மஸ்க் அறிவிப்பு
தைவானை மிரட்ட நடந்த சீனாவின் போர் பயிற்சி நிறைவு
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!