நடிகை ராதா புகார் கூறிய தொழிலதிபர் பைசூல் மீது மேலும் ஒருவர் குற்றச்சாட்ட
2013-12-03@ 00:21:18

சென்னை: வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்கள் மூலம் போதை பொருள் கடத்துவதாக, தொழிலதிபர் பைசூல் மீது ஒருவர் புகார் கொடுத்துள்ளார். ராயப்பேட்டையை சேர்ந்த அக்பர் பாஷா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: ராயப்பேட்டை, யானைக்குளம் 2வது தெரு வில் வசிக்கிறேன். 2007ம் ஆண்டு வரை சென்னையில், துணிகளுக்கு எம்பிராய்டரி போடும் வேலை செய்தேன். வறுமை காரணமாக, வெளிநாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டேன்.
இந்நிலையில், எங்கள் தெருவில் வசிக்கும் நிசார் (43) என்பவர் என்னை அணுகி, எவ்வித செலவும் இல்லாமல் பல இளைஞர் களை வெளிநாடுகளுக்கு அனுப்பி உள்ளேன். அதுபோல் உன்னையும் வெளி நாட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார். அவரது பேச்சை நம்பி வெளிநாடு செல்ல சம்மதித்தேன். 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் என்னுடைய பாஸ்போர்ட்டை நிசாரிடம் ஒப்படைத்தேன்.
25.11.2007 அன்று நிசார், தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு 29ம் தேதி அக்பர் டிராவல்ஸ் மூலம் மும்பை சென்று, வெளி நாடு செல்வதுக்கான பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளும்படி கூறினார். மேலும், சென்னை திருவல்லிக்கேணியில் வசிக்கும் பைசூல் என்பவர் இதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் கூறினார். அதன்படி, பைசூல் என்னை தொடர்புக் கொண்டு 900 அமெரிக்க டாலரும், தைவான் நாட்டு சிம்கார்டும், கொடுத்து என்னை இலவசமாக வெளிநாடு அனுப்பினார்.
முன்னதாக, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நிசார் என்னை சந்தித்து, சுமார் 2 அடி நீளமுள்ள பூங்கொத்து ஒன்றை கொடுத்தார். பூங்கொத்தை எதுக்கு கொடுக்கிறாய் என்று கேட்டதற்கு, இது ஒரு அன்பளிப்பு என்றும், இதை பெறுவதற்கு ஏர்போட்டுக்கு ஒரு நபர் வருவார், அவரிடம் இதை கொடுத்துவிடு எனவும் கூறினார். இதை நம்பி பூங்கொத்தை வாங்கி கொண்டு அன்று இரவு விமானம் மூலம் தைவான் சென்றேன்.
அப்போது தைவான் நாட்டின் சுங்கத்துறையினர், நான் வைத்திருந்த பூங்கொத்து கண்டு சந்தேகம் அடைந்து, பூங்கொத்தை உடைத்துப் பார் த்தனர். அதில் 11 கிலோ எடையில் கேட்டமைன் என்ற போதை பொருள் இருப்பதை கண்டுபிடித்து என்னை கைது செய்தனர். இதையடுத்து தைவான் நாட்டு காவல்துறையினர் என்னை சிறையில் அடைத்தனர்.
கடந்த 5 வருடமாக அந்நாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து, 3.2.2013 அன்று விடுதலை செய்யப்பட்டேன். இந்திய தூதரகத்தின் உதவியோடு இந்தியா திரும்பிய நான், பைசூல் மற்றும் நிசார், ஆகியோரால் என் உயிருக்கு ஆபத்து இருப்பதால் சிறிது காலம் தலைமறைவாக வாழ்ந்தேன். கடந்த ஒரு வாரமாக பைசூல் பற்றி பத்திரிகை யில் வந்த செய்திகளை பார்த்து அவரை அடை யாளம் கண்டு கொண்டேன்.
பைசூல் மூலம் ஏமாற்றப் பட்டு, வெளி நாட்டு சிறை யில் தண்டனை அனுபவிக்கும் பல இளைஞர் களை காப்பாற்றி, பைசூல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் அக்பர் பாஷா கூறியுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக, தொழிலபதிபர் பைசூல் மீது நடிகை ராதா சில தினங்களுக்கு முன்பு புகார் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
சென்னையில் ‘ஜி 20’ மாநாடு கருத்தரங்கம் நடைபெறுவதையொட்டி வரும் 25ம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை
உங்களைப் போன்றவர்களின் பாராட்டுகளே எங்களுக்கு ஊக்கம்: நடிகர் கார்த்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்
காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
4 மாவட்ட நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை.! 62 ஆக உயருகிறது நீதிபதிகளின் எண்ணிக்கை?
அடிக்கடி சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதை கைவிட வேண்டும்: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்..!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகளில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவு: நாளை மறுநாள் தீர்ப்பு..!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!