SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி.ராகவன் செய்துவிட்டார்: சீமானின் பேச்சால் சர்ச்சை

2021-08-31@ 11:40:26

சென்னை : பாலியல் புகாரில் சிக்கிய கே.டி.ராகவனுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி.ராகவன் செய்துவிட்டார் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் கே.டி.ராகவன் பற்றிய ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.  இந்த வீடியோவை பிஜேபி கட்சியை சேர்ந்தவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டார்.  இதற்கு மறுப்பு தெரிவித்த கே.டி.ராகவன் என்னை பற்றி கட்சியிலும், சுற்றியுள்ளவர்களுக்கும் தெரியும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.  அதன்பின் கட்சியிலிருந்து தனது பொறுப்பை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் கே.டி.ராகவனுக்கு ஆதரவாக சீமான் பேசியுள்ளார்.  சென்னை வளசரவாக்கம்  பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான ராவணன் குடிலில் ' மாயோன் பெருவிழா' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மாயோன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  ஒருவரின் அனுமதி , ஒப்புதல் இல்லாமல் அவரது படுக்கை அறையில் சென்று படம் பிடிப்பது சமூக குற்றம் தான்.  உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி.ராகவன் செய்துவிட்டார். அவரது பேச்சை படம் பிடித்த நபரை தான் முதலில் கைது செய்ய வேண்டும்.'எனவும் சீமான் ஆவேசம் பொங்க பேசினார்.

இதைத் தொடர்ந்து சீமானின் பேச்சுக்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், சுரண்டலை கேள்வி கேட்கும் சமூகம் சரியாகதான் இருக்கிறது என்று தெரிவித்தார்.சீமான், கே.டி.ராகவன் போன்றவர்களுடைய வளர்ச்சி தமிழகத்திற்கு குறிப்பாக தமிழக பெண்களுக்கு ஆபத்தானது என்றும் தமிழகத்தில் எதிர்காலமாக உள்ள இளைஞர்கள், மாணவர்கள் சீமான் போன்றவர்களுடைய பொய் முகத்தை புரிந்துக் கொண்டு அவர்களை புறக்கணிக்குமாறும் ஜோதிமணி கேட்டுக் கொண்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

 • tajmahal-love

  தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்