SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆட்டுக்கறி வாங்கி கொடுக்காதவர் மீது அதிக வழக்கு போட்டு வாட்டி எடுக்கும் காக்கியின் ஆட்டத்தை சொல்கிறார்: wiki யானந்தா

2021-08-31@ 00:37:00

‘‘வார்டன்களின் ஒரே போனுக்கு சிறை அதிகாரி பணிந்துபோனது, ஆச்சர்யமாக இருக்கு... மிரட்டிய அந்த பவர்புல் அதிகாரி யாரு...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.   ‘‘மாங்கனி ஜெயில் அதிகாரி ஒருவர், தொழில்நகர ஜெயிலுக்கு திடீருன்னு ரெய்டுக்கு போயிருக்காரு. அந்த ஜெயில்ல 50 கைதிகள் இருக்காங்க. அந்த நேரத்துல பாதுகாப்புக்கு இருந்த வார்டன்களைகாணலையாம். இதனால அதிர்ச்சியடைந்த அந்த அதிகாரி, கர்...புர்ர்னு குறட்ட சத்தம் வந்த பக்கமுள்ள ஓய்வறைய எட்டிப் பார்த்திருக்காரு. அங்க 3 வார்டன்களும் உலகையே மறந்து தூங்கிக்கிட்டிருந்திருக்காங்களாம். அவர்களை, தனது செல்போன்ல பளிச்சென படம் பிடிச்ச பிறகு, 3 பேரையும் எழுப்பினாராம். அதிர்ச்சியில உறைஞ்சு போன அந்த வார்டன்கள், அய்யா நாங்க தூங்கல, கண்ண மூடிக்கிட்டு படுத்துக்கிடந்தோமுன்னு கோரசா சொல்லியிருக்காங்க. இதனால கோபத்தின் உச்சிக்கே போன அந்த அதிகாரி, செல்போன் படத்த எடுத்து காட்டியிருக்காரு. எப்படியும் சஸ்பெண்ட் பாய்ஞ்சிருமுன்னு சட்டென யோசிச்ச ஒரு வார்டன்.. இலைக்கட்சியின் முக்கிய நிர்வாகிக்கு போன் போட்டு விவரத்த சொல்லியிருக்காரு. அதன்பிறகு என்ன நடந்துச்சுன்னு தெரியல. தூங்கிய ஏட்டுக்கள் மகிழ்ச்சியா இருக்காங்களாம். நேர்மையான அந்த அதிகாரிய, இலைக்கட்சி நிர்வாகி மிரட்டினதால தான் வார்டன்கள் சந்தோஷமாக இருக்காங்க... போன் செய்தது யாரு என்பதுதான் சிறையில் பணியில் உள்ள மற்ற ஊழியர்களின் ஹாட் டாபிக்காக மாறி இருக்கு...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கட்சி தாவி, தன் மீது உள்ள ஊழல் புகாரை முடக்க பார்க்கும் இலை நிர்வாகியை பார்த்தால் பாவமாக இருக்கு...’’ என பரிதாபப்பட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரு பஞ்சாயத்து தலைவர் சமீப காலமாக கட்சி தாவுறதுல குறியாக இருக்கிறார். இவர், இலை கட்சியை  சேர்ந்தவர். ஊராட்சி வளர்ச்சி பணி விவகாரத்தில், அரசு ஒதுக்கிய நிதியை நிறையவே ‘ஸ்வாகா’ செய்துட்டாராம். இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு புகார் பறக்க, அவர்கள் ரகசிய ரிப்போர்ட் தயாரித்து மேலிட ஒப்புதலுக்கு அனுப்பி இருக்காங்களாம். இந்த தகவல், ஊராட்சி தலைவர் காதுக்கு எட்டியதாம். அவர் உஷாராகி இனி, இலை கட்சியில் இருந்தால் எந்த பயனும் இல்லை. பேசாம வேறு கட்சிக்கு தாவிட வேண்டியதுதான் என காய் நகர்த்த துவங்கிட்டாராம். இதற்கிடையில், உள்ளூர் ஆளுங்கட்சியினர், இவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பிச்சிட்டாங்க. இந்த மாதிரியான ஆளுகள நம்ம கட்சியில சேர்த்தா, நம்ம கட்சியோட பெயரும் கெட்டுப்போயிடும் என மேலிடத்துக்கு கடிதம் எழுதிட்டாங்களாம். என்னடா நம்ம என்டிரிக்கு ஆரம்பத்துலேயே முட்டுக்கட்டையா என்று டென்ஷனில் இருக்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஆட்டு கறி கேட்டு ஆட்டம் போடும் காக்கியின் அட்ராசிட்டியால் அவதிப்படும் டிரைவரை நினைத்தால் பாவமாக இருக்கிறது...’’ என்று இரக்கப்பட்டார் பீட்டர் மாமா.‘‘வெயிலூர் மாவட்டம் காட்டுப்பாடி பக்கத்துல இருக்குற பொன்னை காவல் நிலையத்துல, வேல்பெயரை முடிவுல கொண்ட காக்கி பணிபுரிஞ்சு வர்றாராம். இவரு, கொரோனா ஊரடங்குல பொன்னை அருகேயுள்ள ஸ்டேட் செக்போஸ்ட்டுல செம வசூல் நடத்துவாராம். இதுல கடந்த சில மாசத்துக்கு முன்னாடி செக்போஸ்ட் பக்கத்துல நிறுத்தியிருந்த, அதே ஏரியாவைச் சேர்ந்தவங்களோட லாரிங்களுக்கு கேஸ் போட்டிருக்காரு. இதனால அந்த காக்கிய கண்டிச்சு, லாரி டிரைவருங்களே மறியல் செஞ்சிருக்காங்க. இதனால இவரை டிரான்ஸ்பர் செஞ்சாங்களாம். உடனே ஒரு மாசத்துல திரும்பவும் அந்த காவல்நிலையத்துக்கே வந்துட்டாராம் அந்த ேவல் பெயரை கொண்ட காக்கி. அதுக்கு காரணம் ஸ்டேட் ெசக்போஸ்ட்டு இருக்குறதால, அங்க நல்ல வசூல் நடக்குதாம். அதை விட்டுட்டு போக அவருக்கு மனசில்லையாம். அதான் எப்படியோ கஷ்டப்பட்டு திரும்பவும் வந்துட்டாராம். இப்ப, ஸ்டேட் செக்போஸ்ட்ட கடந்து போற வாகன ஓட்டிங்ககிட்ட, நான் கேஸ் போட்டா தவுசன், அதுவே என்பாக்கெட்ல போட்டா டூ அன்ரட்ல முடியும். எப்படி வசதின்னு கேட்டு வசூல் நடத்துறாராம். அதுமட்டுமில்லாம, கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி ஸ்டேட் செக்போஸ்ட்டு பக்கத்துல இருக்குற ஆந்திர அரசாங்கத்துல விஆர்எஸ் வாங்கின டிரைவர் ஒருத்தரு செக்போஸ்ட்ட கடந்து பைக்குல போயிருக்காரு.

அவர்கிட்ட, ஆட்டுக்கறியும், கொஞ்சம் களியும் வாங்கிவரணும், இல்லன்னா, இந்த பக்கம் வரும்போது கேஸ் போட்டுருவேன்னு சொல்லியிருக்காரு அந்த காக்கி. அதுக்கு அந்த டிரைவரோ, எனக்கு ஆட்டுக்கறி வாங்குறதுக்கு வசதி இல்லன்னு சொல்லியிருக்காரு. இதனால ஆத்திரமடைந்த வேல் காக்கி ஆட்டுக்கறியல்ல இனி ஆட்டையே வாங்க வெக்கிறண்டான்னு அந்த பக்கம் போகும்போதும், வரும்போதெல்லாம் அவர் வண்டி நம்பரை பார்த்தே, ஏதாவது ஒரு கேஸ் போடுறாராம். இப்படி அந்த செக்போஸ்ட்ட கடக்குற வாகன ஓட்டிகளோட புலம்பல் சத்தம் நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போகுதாம். மாவட்ட காக்கிங்க தான் விசாரிச்சு, உரிய நடவடிக்கை எடுக்கணும்னு பாதிக்கப்பட்டவங்களோட கோரிக்கையாக இருக்குதாம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘அல்வா மாவட்டத்துல எதற்கு அதிகாரிகள் எல்லோரையும் ஒன்றாக மாற்றச் சொல்லி கேட்கிறாங்க...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வாக்காளர் பட்டியல் வெளியிடப்போற நேரத்தில் அல்வா மாவட்டத்துல பல அதிகாரிகள் அப்செட்டில் இருக்காங்களாம். விரைவில் வர இருக்கிற உள்ளாட்சி தேர்தலுக்காக அல்வா மாவட்டத்துலயேயும், பிரிஞ்சி போன மாவட்டத்துலேயும் தேர்தல் நடத்துற துணை அலுவலர்கள மாவட்டம் விட்டு மாவட்டம் மாத்திட்டாங்களாம். ஆனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துற அலுவலர்களை கண்டுக்கவே இல்லையாம். ரெண்டு மாவட்டத்துலயேயும் உதவி இயக்குநர் அந்தஸ்துல உள்ளவங்க, நேர்முக உதவியாளர்கள் என பலரும் இருக்கிற இடத்துலேயே இருந்து காலத்த ஓட்ட பார்க்காங்களாம். மாத்துனா எல்லாத்தையும் முறையா மாத்துங்கன்னு தேர்தல் நடத்தும் துணை அலுவலர்கள் கோரஸா குரல் கொடுத்துட்டு இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

 • cryingroom-19

  இனி வீட்டில் அழுகாதீங்க!: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்