SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரைக்குடியில் ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நினைவுப்பரிசு விற்பனையகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

2021-08-30@ 16:26:03

சென்னை: காரைக்குடியில் ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நினைவுப்பரிசு விற்பனையகம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (30.8.2021) தலைமைச் செயலகத்தில், ஒருங்கிணைந்த கைத்தறி வளர்ச்சி குழுமத் திட்டத்தின் கீழ், விருதுநகர் மாபெரும் கைத்தறி குழுமத் திட்டத்தின் வாயிலாக சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 1 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நினைவுப்பரிசு விற்பனையகத்தை திறந்து வைத்தார். இப்புதிய விற்பனையகம் 5,500 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டு, தரைத்தளத்தில் 4 விற்பனையகங்கள் சுத்த பட்டு இரகங்களுக்கும், 3 விற்பனையகங்கள் பருத்தி இரகங்களுக்கும், முதல் தளத்தில் 6 விற்பனையகங்கள் பருத்தி இரகங்களுக்கும் மீதமுள்ள ஒரு விற்பனையகம் கைவினை பொருட்களை காட்சிப்படுத்துவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கட்டடத்தின் வெளிப்புறத்தில் சிற்றுண்டி சாலை, சிறுவர்களுக்கான விளையாட்டுப் பூங்கா ஆகியவை வாடிக்கையாளர்கள் மற்றும் நெசவாளர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கைத்தறி குழுமம் அமைந்துள்ள சரகங்களில் உற்பத்தி செய்யப்படும் பிரசித்தி பெற்ற முக்கிய இரகங்களான  அருப்புக்கோட்டை காட்டன் சேலைகள், மதுரை சுங்குடி சேலைகள், பரமக்குடி சேலைகள், செட்டிநாடு காட்டன் சேலைகள், திருபுவனம் மற்றும் காஞ்சிபுரம் பட்டு சேலைகள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் இதர இரகங்களும் இவ்விற்பனையகத்தில் விற்பனை செய்யப்படும். இவ்விற்பனையகத்தில் தமிழகத்திலுள்ள 68 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பங்கு பெறும்.

மேலும், இவ்விற்பனையகத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான கைத்தறி துணி  இரகங்கள் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, இ.ஆ.ப., கைத்தறி மற்றும் துணிநூல்துறை முதன்மைச் செயலாளர் / ஆணையர் டாக்டர் பீலா ராஜேஷ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர்  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

  • turist_world

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட உலக சுற்றுலா தினம்... சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்