SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இடிந்த பாலத்தின் கான்டிராக்டர் பின்னணி குறித்த தகவலை சொல்கிறார் : wiki யானந்தா

2021-08-30@ 00:57:58

‘‘உயரதிகாரிகளின் கையில் கூட்டுறவு சங்க இலை தலைவர்களின் ஊழல் பட்டியல் இருப்பதால்... சங்கம் பக்கமே எட்டி பார்ப்பதில்லையமே, அந்தளவுக்கு பயமா...’’ சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘மாநிலம்  முழுவதும் கூட்டுறவு வங்கி மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளில் இலைகட்சியை  சேர்ந்தவர்களே தலைவராக இருந்து வருகின்றனர். ஆட்சி முடியும் நேரத்தில்  ₹12ஆயிரத்து 110 கோடி கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி என அறிவிப்பினை மூன்று எழுத்து முதல்வர் வெளியிட்டு இருந்தார். இந்த அறிவிப்பு  வெளியிடுவதற்கு முன்னதாகவே மனுநீதி சோழ மன்னர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு  வங்கி தலைவர்களுக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டதாம். இதனால் தங்கள்  அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு வேண்டிய இலை நிர்வாகிகளுக்கு,  பயிர் கடன் மற்றும் நகை கடன் கொடுத்ததாக அவசர அவசரமாக போலி பட்டியல்  தயாரிச்சாங்களாம். அதன் பேரில் மனுநீதி சோழ மன்னர் மாவட்டத்தில் மட்டும்  69,487 விவசாயிகள் பெயரில் ₹390 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாம்.

இதுதவிர சாகுபடி பரப்பை விட கூடுதலாக  பயிர் கடன் தள்ளுபடி பெறப்பட்டதும், இதில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட  ஏக்கர் ஒன்றுக்கு கூடுதலாக பல மடங்கு அளவில்  கடன் தொகை பெற்றுள்ளதாகவும்  கடன் தள்ளுபடி அறிவிப்பில் இணைக்கப்பட்டதாம். இந்த பயிர் கடன்  தள்ளுபடியில் போலி விவசாயிகள் பட்டியல் தான் அதிகமாம். இதுதவிர மாவட்டத்தில் அரசு கல்லூரிக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்ததாகவும் கடன் வாங்கியதாகவும் அதை தள்ளுபடி செய்துள்ளதாகவும் ெதரிவிக்கப்பட்டுள்ளதாம். கடந்த ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன்   தள்ளுபடியில் போலி விவசாயிகள் என்ற பெயரில் கோடி கணக்கில் முறைகேடு நடந்தது  கண்டு பிடிக்கப்பட்டு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாம். இந்த  முறைகேடு தொடர்பான ஆதாரம் தற்போது மாவட்ட உயரதிகாரி கையில் உள்ளதால் இலை கட்சியை சேர்ந்த கூட்டுவு வங்கி தலைவர்கள் கிலியில் உள்ளார்களாம். சரணடைவதா... கட்சி ஆதரவுடன் எதிர்த்து நிற்பதா என்பது தான் தற்போது அவர்களின் நிலையாக இருக்காம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுவது குறித்து பாடம் எடுக்கும் அளவுக்கு குக்கர் கட்சி நிர்வாகி தேறி இருக்கிறாராமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மாங்கனி மாவட்டத்தில் ஒரு அரசியல்வாதி இருக்கிறார். குக்கர் கட்சியின் மாநில பொறுப்பில் இருக்கும் அவர், மாஜி எம்எல்ஏவாகவும் இருந்திருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகளை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகவும் சொற்பமான ஓட்டுக்களையே பெற்றார். குக்கரில் இருந்தால் எதிர்காலம் கேள்விக்குறி என்பதால் கும்பல் கும்பலாக மாற்றுக்கட்சிகளுக்கு செல்லும் நிலையில், அவர் மட்டும் நம்பிக்கையோடு இருக்கிறார். கொடநாடு பங்களா மர்டரில் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும், அந்த கும்பலை கூண்டோடு உள்ளே தள்ள வேண்டும். அதற்கான சாத்தியகூறுகள் இருப்பதாக அவரை சுற்றியிருக்கும் தொண்டர்களிடம் விலாவாரியாக விவரித்து வருகிறாராம். . இப்படித்தான் அவரிடம் இருக்கும் தொண்டர்களை கட்டுக்குள் வச்சிருக்காருன்னா பாருங்களேன். ..’’ என்றார் விக்கியானந்தா.‘‘தூங்காநகர மாவட்டத்தில், பாலம் இடிந்த விஷயத்தில் அதிகாரம், பணபலம், ஒன்றிய பலம் ரொம்பவே ஸ்டிராங்காக இருந்ததாம்... மாவட்ட உயரதிகாரிகள் ஆபீஸ் பாய் போல தான் நடத்தப்பட்டாங்களாமே. உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.

 ‘‘மதுரையில்  விபத்து ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 7.5 கி.மீ தூரத்திற்கு  ₹545 கோடியில், பறக்கும் பாலம் கட்டுமான பணி 2018 செப்டம்பரில்  துவங்கியது. ஒன்றிய அரசின் முக்கிய புள்ளிக்கு இப்பாலம் அமைப்பதில் தொடர்பு  இருப்பதால், அவர் மூலம், அப்போது தமிழகத்தில் ஆட்சி செய்த இலை ஆட்சியாளர்களை தங்களது கைப்பாவையாக மும்பை ஒப்பந்ததாரர் நிறுவனம்   வைத்திருந்ததாம். பாலத்திற்கான அறிவிப்பு வெளியிட்டவுடன் நிலம் முறையாக  பொதுமக்களிடம் இருந்து கையகப்படுத்துவதற்கு முன்பாகவே திட்டத்தை நிறுவனம்  ஆரம்பித்தது. மாவட்ட நிர்வாகிகள் சொல்லியும் உள்ளூர் பிரச்னையை நீங்க பார்த்துக்கங்க என்று டாடா காட்டிவிட்டு... பாலபணிகளை துவக்கியதாம்... இழப்பீடுக்கான பணம் சரிவர பொதுமக்களுக்கு வழங்காத நிலையில், ஒப்பந்ததாரர்  நிறுவனத்தின் அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகளின் இருக்கைகளால் அமர்ந்து  கொண்டு, உத்தரவுபோட்டு,  மாவட்ட அதிகாரிகளை ஆபீஸ் பாய் போல வேலை வாங்கினாங்களாம். சட்டப்படி பணி செய்வேன் எனக்கூறிய அதிகாரிகள் குறித்து  ஒப்பந்ததாரர் நிறுவனம் மதுரையில் இருந்து டெல்லிக்கு போன் பேசிய அடுத்த  நொடி இலை ஆட்சியாளர்களுக்கு கட்டளை பறக்கும். இலை முன்னாள்  அமைச்சர்கள், மாவட்ட அதிகாரிகளை அழைத்து மிரட்டி பணியை முடிக்க  உத்தரவிடுவார்களாம்.

ஒப்பந்ததாரர் நிறுவனம் அதிகாரிகளை இப்படி மிரட்டலாமா  என வருவாய்த்துறையில் ஒரு கட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதேபோல்  இப்பாலம் பொதுமக்களுக்கு பயனற்ற பாலமாம். மாவட்டத்தைச் சேர்ந்த இலை முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கும் சேர வேண்டியது சேர்ந்ததால், அவர்களிடம்  விவசாயிகள், பொதுமக்கள் புகார் கூறியும், ‘‘இது மேல்மட்ட விவகாரம். நாங்கள்  தலையிட முடியாது’’ என ஒதுங்கிக்கொண்டனராம்.  இந்த ஒப்பந்ததாரர் நிறுவனம்  ஏற்கனவே கட்டுமான பணிக்கான பெரிய அளவிலான கமிஷனை இலை தரப்புக்கு கொடுத்துவிட்டது. இதனால், அவர்களை தங்களது இஷ்டப்படி ஆட்டி வைத்து, தனி  ராஜ்ஜியம் நடத்தியது. கட்டுமான பணியில் ஈடுபடும் ஊழியர்கள் விபத்தில்  சிக்கினால், அதுபற்றி வெளியே தெரியாதபடி மறைத்துவிடுவார்களாம். இதை இலை அரசு கண்டுகொள்ளாது. அதே பாணியில் தற்போது ஈடுபட்டதால், சிக்கலில்  மாட்டிக்கொண்டனர்...இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் ஒன்றிய அமைச்சர்களில் பவர் புல்லானவரின் தயவை நாடி உள்ளார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

 • cryingroom-19

  இனி வீட்டில் அழுகாதீங்க!: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்