மகா பெரியவர் மணி மண்டபத்தில் தெய்வீக ஓவியங்கள் கண்காட்சி
2021-08-27@ 00:51:13

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் மகா பெரியவரர் சந்திரசேகரேந்திரர் மணி மண்டபம் அமைந்துள்ளது. இங்கு காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் கடந்த ஜூலை 24ம் தேதி முதல் செப்டம்பர் 20ம் தேதி வரை தங்கி சாதுர் மாஸ்ய விரதம் அனுஷ்டித்து வருகிறார். இந்நாட்களின் போது மணிமண்டபத்துக்கு வரும் பக்தர்கள் பார்வையிடுவதற்காக சென்னை அம்பத்தூரில் உள்ள டாட் ஸ்கூல் ஆப் டிசைன் நிறுவனம் சார்பில் தெய்வீக ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சங்கரா பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.வி.ராகவன் தலைமை தாங்கி, கண்காட்சியை திறந்து வைத்தார். டாட் ஸ்கூல் ஆப் டிசைன் நிறுவன தலைவர் ராமநாதன் முன்னிலை வகித்தார். காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இந்த கண்காட்சி நேற்று முதல் வரும் செப்டம்பர் 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இறைநெறி ஓவியர் மணிவேலு வரைந்த ஓவியங்கள் 100க்கும் மேற்பட்டவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
மேலும் செய்திகள்
12 ஆண்டுகளுக்கு பின் மதுரை-தேனி ரயில் சேவை நாளை மறுநாள் தொடக்கம்: பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவி கொலை: 2 இடங்களில் சாலை மறியல்
தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் பாலியஸ்டர் நூல் உற்பத்திக்கு மாற கழிவு பஞ்சு நூல் உற்பத்தியாளர் முடிவு
விருதுநகர் இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கு 7 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
கலால் வரியை குறைத்து பித்தலாட்டத்தை ஒன்றிய அரசு செய்திருக்கிறது: டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி குற்றச்சாட்டு
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்க விழா ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வளித்தவர் கலைஞர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை