பாஜகவில் இருந்து யூடியூபர் மதன் ரவிச்சந்திரன், வெண்பா நீக்கம் : தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் உத்தரவு!!
2021-08-25@ 16:13:47

சென்னை : பாஜகவில் இருந்து யூடியூபர் மதன் ரவிச்சந்திரன், வெண்பா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன், வெண்பா ஆகியோர் தமிழக பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலையை சந்தித்து கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழுவிற்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
இதேவேளை,பாஜகவின் கட்சிக் கொள்கைகளுக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்துகளை தெரிவித்துள்ள மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். அவர்களுடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது' என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவர் உயிரிழப்பு; தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,658 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை அறிக்கை..!
சென்னையில் ஜூலை 8-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
படிக்கும் காலத்தில் அரசியல் உணர்வோடு வளரவேண்டும்: மாணவர்களுக்கு அமைச்சர் பொன்முடி வேண்டுகோள்
தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் போது விபரீதம்; மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
கூடுவாஞ்சேரி அருகே மறியல் போராட்டத்தால் பரபரப்பு, டாரஸ் லாரி மோதி பெண் பலி; 30 அடி தூரத்துக்கு இழுத்து சென்ற அவலம்
தந்தை நினைவாக வைத்திருந்த வைரக்கல் பதித்த ரூ1.50 லட்சம் மதிப்புள்ள தங்கப்பேனா திருட்டு: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!