பொது சொத்துகளை சூறையாடும் ஒன்றிய அரசு: முத்தரசன் கண்டனம்
2021-08-25@ 00:14:06

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிடப்பட்ட அறிக்கை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி, பொது நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரமாக்கி உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டிடங்களை, நிலையங்களை, நிலங்களை விற்று ரூபாய் ஆறு லட்சம் கோடி அளவிற்கு நிதி திரட்டுவது என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
சென்னை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், நெடுஞ்சாலை என பல்வேறு இடங்களில் அரசுக்கும், பொதுத்துறைக்கும் சொந்தமான மக்களின் சொத்துகளை தனியாருக்கு விற்பது மக்களின் சொத்துகள் மீது அரசே நடத்தும் சட்டப்பூர்வ கொள்ளையாகும். இது நாட்டின் சுயசார்பை ஆணிவேருடன் பிடுங்கி எறியும் அபாயகரமான நடவடிக்கையாகும். இந்த தீய விளைவுகளை உருவாக்கும் மக்கள் விரோத, தேச விரோத கொள்கைகளை வன்மையாக கண்டிப்பதுடன் மக்கள் உரிமை பெற்ற பொதுச் சொத்துகளை விற்பதை உடனடியாக கைவிட வேண்டும்.
Tags:
Condemnation of public property looting Union Government Mutharasan பொது சொத்துகளை சூறையாடும் ஒன்றிய அரசு முத்தரசன் கண்டனம்மேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
ஆஷாக்களுக்கு கிடைத்த விருதால் இந்தியாவிற்கு பெருமை: ஜி.கே.வாசன் அறிக்கை
பெட்ரோல், டீசல் விலை இனி உயராது என்ற உறுதிமொழியே உண்மையான தீர்வை தரும்: ஒன்றிய அரசு நாடகமாடுவதாக கமல்ஹாசன் குற்றச்சாட்டு
குடிநீர் வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு 14 சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து தமிழகத்தில் 26, 27ம் தேதி ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக கூட்டாக அறிவிப்பு
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரியை ஏற்றியது ரூ.26.77 குறைத்தது ரூ.14.50: ஒன்றிய அரசு மீது கே.எஸ்.அழகிரி தாக்கு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை