தலிபான் தலைவர்களில் ஒருவர் இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்றவர்: ஆப்கான் ராணுவ வீரராக 1982-ல் இந்தியாவில் பயிற்சி பெற்ற ஷேர் முகமது அப்பாஸ்
2021-08-20@ 15:12:35

காபூல்: தலிபான்களில் முக்கிய தலைவர்களுள் ஒருவராக கருதப்படும் ஷேர் முகமது அப்பாஸ் இந்திய ராணுவத்துடன் பயிற்சி பெற்றவர் என்பது தெரிய வந்தது. 1971-ம் ஆண்டு முதல் இந்திய ராணுவ அகாடமி ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு பயிச்சி அளித்து வருகிறது. அதன்படி 1982-ம் ஆண்டு டேராடூனில் ஆப்கான் ராணுவத்தில் இருந்து பயிற்சிக்கு சேர்ந்தவர் ஷேர் முகமது அப்பாஸ். இங்கு ராணுவம் சார்ந்த அனைத்து பயிற்சிகளையும் பெற்று நாடு திரும்பிய ஷேர் முகமது 1996-ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து விலகு தலிபான்களிடம் சேர்ந்துவிட்டார். அவரது ஆங்கில பேச்சு திறமையால் 1997-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
1996-ம் ஆண்டு, தலிபான் அரசை அங்கீகரிக்க வேண்டும் என அமெரிக்காவுக்கு பயணம் செய்தார். இருப்பினும், அது தோல்வியில் முடிவடைந்தது. ஸ்டானிக்ஜாய் தலைமையில்தான் தலிபான் குழு சீனாவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. தற்போது தலிபான்களின் சக்திவாய்ந்த 7 தலைவர்களில் ஒருவராக ஷேர் முகமது அப்பாஸ் கருதப்படுகிறார்.
மேலும் செய்திகள்
தட்டுப்பாடின்றி பக்தர்களுக்கு லட்டு கிடைக்க நடவடிக்கை: தேவஸ்தான அதிகாரி தகவல்
சேலையால் கழுத்தை நெரித்து கணவனை கொன்ற மனைவி கைது
ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல்: மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பு
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கர்நாடக பாஜக இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்: தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு
அடிதடி வழக்கில் இருந்து மகனை விடுவிப்பதாக கூறி தாய்க்கு செக்ஸ் டார்ச்சர்: சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
அழகு சாதன கிரீம் பூசிய 3 பெண்களுக்கு சிறுநீரக பாதிப்பு: மும்பையில் சோகம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!