ஆம்பூரில் திருமணத்துக்கு 4 நாட்கள் உள்ள நிலையில் மணமகன் முகத்தில் ஆசிட் வீசிய பைக் ஆசாமிகள்
2021-08-19@ 01:21:28

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ஆயிஷாபீ நகரைச் சேர்ந்தவர் ஷமில்அஹமத்(28). இவர் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், சென்னையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் வரும் 23ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அவர்களது குடும்பத்தினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஷமில்அஹமத் வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு புறப்பட்டார். வழியில் தனது நண்பர்களை பார்க்க அதே பகுதியில் உள்ள ஒரு தெருவில் நடந்து சென்றார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள், ஷமில்அஹமத் மீது திடீரென ஆசிட் வீசினர். இதில் அவரது முகம், இடது தோள் பட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்த பைக் ஆசாமிகள், தப்பி சென்றுவிட்டனர். இதையடுத்து படுகாயம் அடைந்த ஷமில்அஹமத்தை பொதுமக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
மேலும் செய்திகள்
ஐசிஎப் கேரேஜ் பணிமனையில் ஆர்பிஎப் ஏட்டுக்கு சரமாரி கத்திக்குத்து: தப்பிய காவலர் மர்ம மரணம்
மனைவிக்கு சரமாரி வெட்டு: கணவன் கைது
சிறுமிகளை கடத்தி பலாத்காரம் வாலிபருக்கு குண்டாஸ்
வாலிபரை தாக்கி வழிப்பறி: மர்ம கும்பலுக்கு வலை
பெண்ணிடம் செயின் பறிப்பு
மகளை கடத்தி திருமணம் செய்ததால் மாப்பிள்ளையின் தாய் வெட்டிக் கொலை பெண்ணின் தந்தை கைது
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்