2வது சுற்றில் சத்யன், மனிகா
2021-08-19@ 00:29:42

புடாபெஸ்ட்: உலக டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சத்யன், மனிகா காலிறுதிக்கு முந்தைய 2வது சுற்றுக்கு முன்னேறினர். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உலக டேபிள் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். அதற்காக டோக்கியோவில் இருந்து நேரடியாக புடாபெஸ்ட் சென்றனர். நேற்று நடந்த ஆடவர் பிரிவு முதல் சுற்றில் பங்கேற்ற தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் 3-1 என்ற செட்களில் பிரான்ஸ் வீரர் கான் கேன் அக்குசுவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். இன்று 2வது சுற்றில் இத்தாலி வீரர் நியகோல் ஸ்டோயநோவை எதிர்கொள்கிறோர். மற்றொரு இந்திய வீர் அர்மீீத் தேசாய் முதல் சுற்றில் ஹங்கேரியின் சபா ஆந்தராசை 3-2 என்ற செட்களில் வீழ்த்தினார்.
மானவ் தாக்கர் 3-0 என்ற நேர் செட்களில் பெலாரஸ் வீரர் பாவெல் பிளாட்டனோவை வென்றார். அர்மீத் அடுத்த சுற்றில் ஜெர்மனி வீரர் டாங் கியூவுடனும், மானவ் ரஷ்ய வீரர் கிரில் ஸ்கோச்சகோச்சவுடனும் மோதுகின்றனர். மகளிர் பிரிவில், டோக்கியோ ஒலிம்பிக்சில் அசத்திய மணிகா பத்ரா முதல் சுற்றில் 3-2 என்ற செட்களில் ஜெர்மனி வீராங்கனை ஷபின் வின்டரை போராட்டி வென்றார். அவர் இன்று இத்தாலியின் ஜார்ஜியா பிக்கோலினுடன் மோதுகிறார். அர்ச்சனா காமத் 3-2 என்ற செட்களில் ரஷ்யாவின் யானா நோஸ்கோவையை வீழ்த்தினார். 2வது சுற்றில் மரியா தைலகோவாவுடன் (ரஷ்யா) மோதுகிறார். ஸ்ரீஜா அகுலா 3-2 என்ற செட்களில் ஸ்வீடன் வீராங்கனை லிண்டா பெர்க்ஸ்ட்ரோமை வீழ்த்தினார். அவர் 2வது சுற்றில் ஸ்லோவாக்கியாவின் பார்போரா பாலசோவாவை எதிர்கொள்கிறார்.
மேலும் செய்திகள்
இங்கிலாந்து எங்களுக்கு மிகவும் சவாலான அணியாக இருக்கும்: இந்திய கேப்டன் ரோகித்சர்மா பேட்டி
முதல் டி20 போட்டியில் இன்று இந்தியா - இங்கிலாந்து மோதல்: இரவு 10.30க்கு தொடக்கம்
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு தவான் கேப்டன்
விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதியில் ரைபாகினா
ரூட் - பேர்ஸ்டோ அபார ஆட்டம் இமாலய இலக்கை விரட்டி இங்கிலாந்து அணி சாதனை: தொடரை சமன் செய்து அசத்தல்
சில்லி பாய்ன்ட்...
ஆச்சரியம்..!: அமெரிக்காவில் விசித்திரமாக பச்சை நிறத்தில் தோன்றிய வானம்..!!
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..