பெட்ரோல், டீசல் மீதான வரியாக மட்டும் ரூ.22 லட்சம் கோடி வருவாயை ஈட்டியது மத்திய அரசு : காங்கிரஸ் சாடல்!!
2021-08-17@ 12:11:01

டெல்லி : பெட்ரோல், டீசல் மீதான வரியாக மட்டும் ரூ.22 லட்சம் கோடி வருவாயை மத்திய அரசுக்கு கிடைத்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எண்ணெய் நிறுவனங்களுக்காக வெளியிட்ட ரூ.1,40,000 கோடிக்கான கடன் பத்திரங்கள் காரணமாக தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் வரி மீதான வரியை குறைக்க முடியவில்லை என்று கூறினார்.இந்த கடன் பத்திரங்களுக்கு இதுவரை ரூ.70,000 கோடிக்கு மேல் வட்டி கட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடன் பத்திரங்கள் முதிர்ச்சி அடைவதால் அவற்றுக்கான தொகையை திரும்ப தரவேண்டி உள்ளதாகவும் இதன் காரணமாக பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரியை குறைக்க முடியாத நிலையில், மத்திய அரசு உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதும் அதன் பலன்கள் மக்களுக்கு கிடைக்கவிடாமல் மத்திய அரசு தடுத்ததாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக ட்விட்டரில் எதிர்ப்பை பதிவு செய்துள்ள அவர், பெட்ரோல், டீசல் மீது வரி மீது வரி விதித்து கடந்த 7 ஆண்டுகளில் மக்களிடம் இருந்து ரூ. 22 லட்சம் கோடியை மத்திய அரசு பறித்துள்ளதாக தெரிவித்துள்ளார். எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் பத்திரங்களுக்கு இதுவரை ரூ.3500 கோடி மட்டுமே பணம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டியுள்ள அவர், இந்த விவகாரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து பொய் கூறி வருவதாக சாடினார். காங்கிரஸ் ஆட்சியில் குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டதாகவும் அதற்கு உரிய மானியமும் உடனுக்குடன் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
இளநிலையில் இருந்து முதுநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகைபெற அனுமதி பெற தேவையில்லை: யுஜிசி அறிவிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 99 பேருக்கு கொரோனா உறுதி: உயிரிழப்பு இல்லை.! ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
மத்திய பிரதேசத்தில் நடந்த பயிற்சியில் பயங்கரம் 2 போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி நொறுங்கியது: விமானி பலி; 2 பேர் காயங்களுடன் மீட்பு
இறுதிகட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் நடைபயணம் இன்றுடன் நிறைவு: ஸ்ரீநகரில் நாளை பொதுக்கூட்டம்
இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி புதிய மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
சமூக ஊடகங்கள் மீதான புகாரை விசாரிக்க 3 மேல்முறையீடு குழுக்கள் அமைத்தது ஒன்றிய அரசு: முழுநேர உறுப்பினராக அசுதோஷ்சுக்லா ஐபிஎஸ் நியமனம்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!