SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல் நாளில் இந்தியா 276 ரன் குவிப்பு; நான் பார்த்ததில் கே.எல்.ராகுலின் பெஸ்ட் இன்னிங்ஸ் இது: ரோகித்சர்மா பாராட்டு

2021-08-13@ 16:05:12

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில் 2வது டெஸ்ட் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் காயம் காரணமாக ஷர்துல் தாகூருக்கு பதிலாக இசாந்த் சர்மா சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டு, மொயின் அலி, மார்க் வுட், ஹசீப் ஹமீத் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்தியாவின் கே.எல்.ராகுல்-ரோகித்சர்மா பேட்டிங்கை தொடங்கியது.

இருவரும் நிதானமாக ஆடி நல்ல தொடக்கம் அளித்தனர். ஒருபுறம் ராகுல் பொறுமை காட்ட மறுபுறம் ரோகித்சர்மா அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டினார். 83 பந்தில் ரோகித்சர்மா அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டிற்கு  126 ரன் சேர்த்த நிலையில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித்சர்மா 83 ரன்னில் (145 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆண்டர்சன் பந்தில் போல்டானார். அடுத்து வந்த புஜாரா ஒரு கேட்ச், எல்பிடபிள்யூ கண்டத்தில் இருந்து தப்பிய நிலையில் 9 ரன்னில் ஆண்டர்சன் பந்தில் கேட்ச்  ஆனார். அவர் கடைசியாக ஆடிய 10 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

பின்னர் ராகுலுடன் கேப்டன் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். இதனிடையே சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 6வது சதத்தை அடித்தார். 3வது விக்கெட்டிற்கு இருவரும் 117ரன் சேர்த்த நிலையில், அணியின் ஸ்கோர் 267 ரன்னாக இருந்த போது விராட் கோஹ்லி 42 ரன்னில் ராபின்சன் பந்தில் ரூட்டிடம் கேட்ச் ஆனார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 90 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 127,  ரகானே ஒரு ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் ரோகித்சர்மா கூறியதாவது:  கே.எல்.ராகுல் பேட்டிங்கில் நான் பார்த்ததில் மிகச் சிறந்த இன்னிங்சாக இது இருக்கலாம். முதல் பந்தில் இருந்து நாள் முடிவடையும் வரை அவர் மிகவும் கட்டுப்பாட்டுடன் ஆடினார். எந்த நேரத்திலும் அவர் குழப்பமடைந்ததாகவோ அல்லது அதிகமாக யோசித்ததாகவோ தெரியவில்லை. அவர் தனது திட்டங்களில் மிகவும் தெளிவாக இருந்தார், உங்கள் திட்டங்களை நம்பும்போது, ​​அவை நிச்சயமாக வேலை செய்யும். இன்று அவரது நாள், அவர் அதை உண்மையில் நிரூபித்தார், என்றார்.

ரோகித் சர்மா-ராகுல் சாதனை...
* கடந்த 47 ஆண்டுகளில் லார்ட்ஸில் சிறந்த தொடக்க பார்ட்னர் ஷின் ரன்.
* கடந்த 14 ஆண்டுகளில் இங்கிலாந்தில் சிறந்த பார்ட்னர் ஷிப்.
* கடந்த 10 ஆண்டுகளில் ஆசியாவுக்கு வெளியே சிறந்த தொடக்க பார்ட்னர் ஷிப்.
* ஒட்டுமொத்தமாக கடந்த 4 ஆண்டுகளில் சிறந்த வெளிநாட்டில் தொடக்க ஜோடி ரன் குவிப்பு.

பிட்ஸ்....பிட்ஸ்....
* நேற்று ரோகித்சர்மா-கே.எல்.ராகுல் முதல்விக்கெட்டிற்கு 126 ரன் எடுத்தனர். 2011ம் ஆண்டுக்கு பின் ஆசியாவுக்கு வெளியே டெஸ்ட் கிரிக்கெட் இந்தியாவின் தொடக்க ஜோடி நேற்று 100 ரன்களுக்கு மேல் எடுத்தது. மேலும் 1952ம் ஆண்டுக்கு பின் லார்ட்ஸ் மைதானத்தில் சிறந்த ஓபனிங் பார்ட்னர்ஷிப் இது தான்.
* இங்கிலாந்தில் கே.எல்.ராகுலின் 2வது சதம் இதுவாகும். லார்ட்சில் முதல் சதம் அடித்ததால் ஹானர்ஸ் போர்டில் அவரது பெயர் பதிவு செய்யப்பட்டது. மேலும் லார்ட்சில் சதம் விளாசிய 3வது தொடக்க இந்திய வீரர் என்ற சாதனையை ராகுல் படைத்தார். இதற்கு முன் மான் கட், ரவிசாஸ்திரி சதம் அடித்துள்ளனர்.
* இங்கிலாந்துக்கு எதிராக கடைசியாக ஆடிய 11 டெஸ்ட்டில் ஒன்றில் மட்டுமே கோஹ்லி டாஸ் வென்றுள்ளார். 10ல் இங்கிலாந்து டாஸ் வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக கோஹ்லி கேப்டனாக களம் இறங்கிய 63 டெஸ்ட்டில் 36ல் டாசில் தோற்றுள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • nepal_snowfall

  நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 2 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு; பலர் காயம்

 • italy-first-female

  இத்தாலியில் முதல் பெண் பிரதமராக ஜியோர்ஜியா மெலோனி

 • shooting-russia-school-26

  ரஷ்யாவில் பள்ளி வளாகத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு..!!

 • nia-23-kerala

  பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

 • ship-22

  இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்