புளியந்தோப்பில் குட்கா விற்றவர் கைது
2021-08-13@ 15:44:21

பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாக புளியந்தோப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று ஆடு தொட்டி பகுதி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது, சந்தேகப்படும்படி பைக்கில் வந்த ஆசாமியை மடக்கி விசாரித்தனர். அவர், முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது 200 குட்கா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து பைக்குடன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொடுங்கையூர் பெரியார் சாலை சத்யா நகர் பகுதியை சேர்ந்த கோவில்ராஜ் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கோவில்ராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
சேலம் அருகே ஆயுதம் தயாரிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது: நாட்டுத் துப்பாக்கிகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்
வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பினால் போதை மாத்திரை, ஊசி சப்ளை :2 பேர் கைது; 1300 போதை மாத்திரை
அமைந்தகரையில் பட்டப்பகலில் நடுரோட்டில் பைனான்சியர் வெட்டி கொலை சிசிடிவி காட்சியால் பரபரப்பு
பகலில் ஊர், ஊராக சென்று நோட்டமிட்டு இரவில் கைவரிசை ஏடிஎம் மெஷினை உடைத்து ₹4.89 லட்சம் கொள்ளையடித்த நண்பர்கள் 2பேர் கைது-யூ டியூப்பில் பார்த்து கைவரிசை காட்டினர்
லாரி டிரைவரை கத்தியால் வெட்டி செல்போன் பறித்த 6 பேர் கும்பல் 4 மாதங்களுக்கு பின் அதிரடி கைது-பரபரப்பு தகவல்கள்
திருவண்ணாமலை காந்திநகர் பகுதியில் அடுத்தடுத்து 8 கடைகளில் பூட்டு உடைத்து முகமூடி அணிந்த மர்ம ஆசாமி கைவரிசை
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்