கேரளாவில் இன்று முதல் மது வாங்க தடுப்பூசி கட்டாயம் : குடிமகன்கள் செம ஷாக்
2021-08-11@ 16:34:50

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களுக்கு செல்ல நிபந்தனைகள் கடுமையாகப்பட்டுள்ளன. அதன்படி முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்கள், கொரோனா ஆர்டிபிசிஆர் நெகடிவ் சான்றிதழ் அல்லது கொரோனா பாதித்து ஒரு மாதத்துக்கு மேலானவர்கள் மட்டுமே கடைகளுக்கு செல்ல ேவண்டும் என்று கேரள அரசு உத்தரவிட்டது. ஆனால் மது வாங்க செல்பவர்களுக்கு தளர்வுகள் இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் கேரள அரசின் நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த நீதிமன்றம் கடைகளுக்கும், அலுவலகங்களுக்கும் செல்பவர்களுக்கு மட்டும் நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது. ஆனால் மது வாங்க செல்பவர்களுக்கு எந்த நிபந்தனையும் கிடையாது என்பது வேடிக்கையாக உள்ளது. எனவே மது வாங்க செல்பவர்களுக்கும் நிபந்தனைகளை கடுமையாக்க வேண்டும் என்று தெரிவித்தது
இதையடுத்து இன்று முதல் கேரளாவில் மதுக்கடைகளுக்கு செல்பவர்களுக்கும் தடுப்பூசி உள்ளிட்ட நிபந்தனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல்டோஸ் தடுப்பூசி போட்டவர்கள், ஆர்டிபிசிஆர் நெகடிவ் சான்றிதழ் உள்ளவர்கள், கொரோனா வந்து ஒரு மாதத்துக்கு மேலானவர்கள் மட்டுமே மது வாங்க கடைக்கு செல்ல வேண்டும் என்று கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே தொற்று சதவீதம் 8க்கு மேல் இருக்கும் பகுதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Tags:
கேரளாமேலும் செய்திகள்
கபடியை தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டான கோகோ ஆட்டமும் தொழில் முறை லீக் போட்டியாக அரங்கேற்றம்...
குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.20% உயர்த்தியது எஸ்.பி.ஐ: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!
75ஆவது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு...
மக்களை கவர முயற்சி: வருமான வரி விலக்கு, கழிவுகள் பெறும் முறை ரத்தாகிறது..வரிவிலக்கு இல்லாத வருமானவரி திட்டத்தை நிரந்தரமாக்க ஒன்றிய அரசு முடிவு..!!
இந்தியாவின் அடையாளங்களாக திகழும் காந்தி, நேரு போன்ற தலைவர்களை பிரதமர் மோடி இழிவுபடுத்திவிட்டார்: காங். தலைவர் சோனியாகாந்தி கண்டனம்..!!
சவால்களை கடந்து சாதனை படைக்கிறது; உலகத்துக்கே நம்பிக்கையாக திகழ்கிறது இந்தியா: சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி பெருமிதம்..!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!