நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி வருண்குமாரிடம் புரட்சி பாரதம் கட்சியினர் புகார்
2021-08-10@ 00:17:08

திருவள்ளூர்: நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமாரிடம் புரட்சி பாரதம் கட்சி மாநில வழக்கறிஞர் அணி பொது செயலாளர் கே.எம்.ஸ்ரீதர் தலைமையில் புகார் மனு கொடுத்துள்ளனர். மனு விவரம்: நடிகை மீரா மிதுன் சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு தாழ்த்தப்பட்டோர் பற்றி அவதூறாக பேசி களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவர் அமைதியான சூழலை சாதிய வன்மம் உணர்வோடு பேசி சீர்குலைத்த தால் கலகம் செய்ய தூண்டுதல், ஜாதி மத விரோத உணர்வைத் தூண்டும் விதமாக பொது அமைதியை குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். எனவே அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்போது மாவட்ட செயலாளர் கூடப்பாக்கம் இ.குட்டி, மாவட்ட தலைவர் பிரின்ஸ் ஜி.பன்னீர், மாவட்ட பொருளாளர் நயப்பாக்கம் டி.மோகன், மாநில செயலாளர் டி.கே.சீனிவாசன், மாநில நிர்வாகிகள் சி.பி.குமார், பொன்னுதுரை, நகர செயலாளர் எம்.எழில்வண்ணன், நகர தலைவர் டி.தேவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:
Actress Meera Mithun Action SP Varunkumar Revolutionary Bharat Party Complaint நடிகை மீரா மிதுன் நடவடிக்கை எஸ்பி வருண்குமாரிடம் புரட்சி பாரதம் கட்சி புகார்மேலும் செய்திகள்
உண்டியல் பணத்தை திருட முயற்சி தடுத்தவருக்கு கடப்பாரை அடி; காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கைது
வால்பாறையில் தொடரும் கனமழை மண்சரிவு; வீடுகள் இடிந்து சேதம்: நகராட்சி கமிஷனர் உயிர் தப்பினார்
சென்னைக்கு கடத்த முயன்றபோது மினி வேனுடன்; ரூ. 5 லட்சம் குட்கா பறிமுதல்
பந்தலூர் அருகே உணவு தேடி வந்து வீட்டை சூறையாடிய காட்டு யானை: மக்கள் அச்சம்
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் இன்று பிரசவத்தின் போது, தாய் இரட்டை குழந்தைகள் சாவு; உறவினர்கள் போராட்டம்
புதுச்சேரி அருகே கடன் தொல்லையால் மனைவி, 2 குழந்தைகளை கொன்று ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!