SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாட்ஸ் அப்பில் தடுப்பூசி சான்றிதழ்: ஒன்றிய அரசு புதிய வசதி

2021-08-09@ 00:35:32

புதுடெல்லி, ஆக. 9: கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் சான்றிதழ் வழங்கி வருகிறது. ‘கோவின்’ இணையதளத்தின் மூலம் இது அளிக்கப்படுகிறது. தற்போது, மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்வது உட்பட பல்வேறு வகைகளில் இந்த சான்றிதழ் கேட்கப்படுகிறது. இதனால், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். கோவின் இணையதளத்தில் இருந்து உடனடியாக இதை டவுன்லோடு செய்வதும் பல நேரங்களில் சிக்கலாக இருக்கிறது. இந்நிலையில், இந்த சான்றிதழை எளிதாக பெறுவதற்கான வாட்ஸ் அப் வசதியை ஒன்றிய சுகாதார அமைச்சகம் செய்துள்ளது.

இது குறித்து இத்துறையின் அமைச்சர் மான்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘சமான்ய மனிதனின் வாழ்க்கையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் புரட்சி. கொரோனா தடுப்பூசி சான்றிதழை இப்போது வாட்ஸ் அப்பில் 3 எளிய நடைமுறையில்  பெறலாம். 90131 51515 என்ற எண்ணை செல்போனில் பதிவு செய்யுங்கள். ‘covid certificate’ என்று வாட்ஸ் அப்பில் டைப் செய்யுங்கள். உங்களுக்கு வரும் ஓடிபி எண்ணை குறிப்பிடுங்கள். உங்கள் சான்றிதழை நொடியில் பெறுங்கள்,’ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

  • anna-15

    பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

  • gujarat-14

    கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்