செவ்வாய் கிரகத்தில் பாறை துகள்கள் சேகரிப்பு பெர்சவரன்ஸ் ரோவரின் முதல் முயற்சி தோல்வி
2021-08-09@ 00:35:27

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கருதப்படுவதால், இந்த கிரகத்தை ஆய்வு செய்வதில் உலக நாடுகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில், இந்தாண்டு பிப்ரவரியில் அமெரி்க்காவின் பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அது, செவ்வாயின் பரப்புகளை பல்வேறு கோணங்களி்ல் படம் பிடித்து அனுப்பி வருகிறது. ஆனால், இந்த ரோவரின் முக்கிய பணியே, செவ்வாய் கிரகத்தில் இருந்து பாறை, மண் துகள்களை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதுதான். இந்நிலையில், பாறைகளை துளையிட்டு அதில் இருந்து துகள்களை சேகரிக்கும் அதன் முதல் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பெர்சவரன்ஸ் ரோவரில் இணைக்கப்பட்டுள்ள ரோபோ கரத்தில், தரையை துளையிடுவதற்கான கருவியும், துகள்களை சேகரிப்பதற்கான கருவிகளும் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும், இவ்வாறு சேகரிக்கப்பட்ட மண், பாறை துகள்களை பாதுகாப்பாக சேமித்து வைக்க 43 டைட்டானியம் குழாய்களும் உள்ளன.
பாறையை துளையிட்டு துகள்களை சேகரிக்கும் பெர்சவரன்சின் முதல் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. பாறையை வெற்றிகரமாக துளையிட்ட அது, துகள்களை சேகரித்து குழாய்களில் அடைக்கும் முயற்சியில் தோல்வி அடைந்தது. இந்த பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
நிலவில் 800 கோடி மனிதர்கள் கிட்டத்தட்ட 1 லட்ச ஆண்டுகள் வாழ தேவையான ஆக்சிஜன் இருப்பதாக நாசா தகவல்!!
ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைகோள்: சீனா சாதனை
ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வில் புது தகவல்: விண்கற்கள் எதனால் ஆனவை?
அணுக்கரு இணைப்பில் அதிக ஆற்றலை கொணர்ந்து சாதனை: ஐரோப்பிய விஞ்ஞானிகளின் முயற்சி வெற்றி..!!!
2022ம் ஆண்டின் முதல் ராக்கெட் :பிஎஸ்எல்வி - சி52 ராக்கெட் 3 செயற்கைக்கோள்களுடன் பிப்.14-ல் விண்ணில் பாய்கிறது!!
கைவிடப்பட்ட ராக்கெட் வரும் மார்ச் 4ம் தேதி நிலவில் மோதுகிறது: ராக்கெட் மோதுவதால் நிலவில் பள்ளம் ஏற்படும் என நாசா தகவல்!!
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!