கிணத்துக்கடவு அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து; மஞ்சிகள் எரிந்து நாசம்
2021-08-05@ 11:52:32

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே காட்டம்பட்டியிலிருந்து திருப்பூர் செல்லும் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிற்சாலைக்கு வெளியே மஞ்சிகள் உலர வைக்கப்பட்டு, பண்டல்களாக கட்டி வைக்கப்பட்டிருந்தன. நேற்று அதிகாலை திடீரென தொழிற்சாலையிலிருந்து புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதற்குள் தீ மளமளவென உலர வைக்கப்பட்ட மஞ்சிகளில் பரவியது. விரைந்து வந்த கிணத்துக்கடவு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
மேலும் தீயை கட்டுப்படுத்த கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு வண்டி வரவழைக்கப்பட்டு இரண்டு வண்டிகளில் தீயை அணைக்க தண்ணீர் அடிக்கப்பட்டது.காலை 9 மணி வரை 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள தென்னை நார் மஞ்சிகள் எரிந்து நாசமாயின. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கோவையில் சட்டவிரோதமாக மண் எடுத்த செங்கல் சூளைகளுக்கு ரூ.373.74 கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்பாயத்துக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை..!!
வெம்பக்கோட்டையில் ஆண் உருவம் சுடுமண் பொம்மை கண்டெடுப்பு
சேலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து துப்பாக்கி தயாரித்த வழக்கு சென்னை கோர்ட்டுக்கு மாற்றம்
புதுச்சேரி சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு
வானூர் அருகே திமுக நிர்வாகி வெட்டிக்கொலை: 3 பேர் கைது 4 பேருக்கு வலை
ஊட்டி அருகே சிறுத்தை தாக்கி 4 வயது சிறுமி பலி
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!