SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவிலேயே முதல் முறையாக ‘‘மக்களை தேடி மருத்துவம்’’ திட்டம் தொடக்கம் : நோயாளிகளின் வீட்டிற்கே சென்று மருந்துகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்!!

2021-08-05@ 10:21:26

கிருஷ்ணகிரி: இந்தியாவிலேயே முதல் முறையாக, ஓசூர் அருகே ‘‘மக்களை தேடி மருத்துவம்’’ என்னும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.தமிழகத்தில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுவதோடு, மருந்து-மாத்திரைகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனை தவிர்க்கும் நோக்கிலும், நோயாளிகளின் நலன் கருதியும் ‘‘மக்களை தேடி மருத்துவம்’’ என்னும் திட்டம் தொடங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டத்தின்படி, சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே மருத்துவ குழுவினர் நேரடியாக சென்று, அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கி, சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குவார்கள்.

இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த திட்டத்தை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சாமனப்பள்ளி கிராமத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.

இதையொட்டி, சாமனப்பள்ளி கிராமத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சரோஜாவின் இல்லத்திற்கே நேரடியாக சென்று, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக, மருந்துகளை முதல்வர் வழங்கினார். தொடர்ந்து பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சந்திரசேகரின் இல்லத்திற்கு சென்றும் மருந்து மாத்திரைகளை ஸ்டாலின் வழங்கினார்.மூக்கனூரை சேர்ந்த கால்கள் இழந்த இருவருக்கு செயற்கைக் கால்களையும் முதல்வர் வழங்கினார்.சூளகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 108 ஆம்புலன்ஸையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.அதன் பின்னர், செவிலியர் மற்றும் இயன்முறை சிகிச்சையாளர்களுக்காக 3 புதிய வாகனங்களை தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்