சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜ் பெயர்கள் நீக்கம் இல்லை: விமான நிலைய அதிகாரி ஆர்டிஐயில் தகவல்
2021-08-05@ 00:03:43

சென்னை: சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜ் பெயர்கள் நீக்கம் இல்லை என்று சென்னை விமான நிலைய அதிகாரி பனிக்கர் ஆர்டிஐ மூலம் தகவல் அளித்துள்ளார். சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள உள்நாட்டு விமான முனையத்திற்கு காமராஜர் பெயரும், சர்வதேச விமான முனையத்திற்கு அண்ணா பெயரும் இருக்கிறது. சென்னை உள்நாட்டு முனையத்தில் இருந்த பெயர்ப் பலகையில் இருந்து காமராஜ் பெயர் நீக்கப்பட்டது மற்றும் சென்னை விமான நிலைய இணையதளத்தில் இருந்த காமராஜ் மற்றும் அண்ணா பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்தது. இதுகுறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கடந்த சில மாதங்களாக இந்த இரு பெயர்களையும் நீக்கக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த இரு பெயர்கள் நீக்கம் சம்பந்தமாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
அதற்கு சென்னை விமான நிலைய அதிகாரி பனிக்கர் அளித்த பதில்: தற்போது சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயரும், சர்வதேச விமான நிலையத்திற்கு அண்ணா பெயரும் உள்ளது. இந்த இரண்டு பெயர்களும் நீக்கப்படவில்லை. மாறாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் பெயர் பலகை மட்டும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய இணையதள பக்க முகப்பில் காமராஜ் மற்றும் அண்ணா பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
விமான நிலைய கட்டுமானப் பணிகள் முடிவடைந்தவுடன் பெயர் பலகைகள் மீண்டும் வைக்கப்படும் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,‘‘இந்தியாவின் பல்வேறு பிரதமர்களை உருவாக்கிய கிங்மேக்கர் என்று அழைக்கப்படும் கர்மவீரர் காமராஜர் பெயரையும், தமிழ்நாட்டின் சிறப்புமிக்க முதலமைச்சராக விளங்கிய அறிஞர் அண்ணாவின் பெயரையும் சிறப்பிக்கும் வகையில் உள்ள சென்னை விமான நிலையத்தின் பெயர்களை எக்காரணம் கொண்டும் மாற்ற கூடாது. மேலும் பெயர் பலகைகள் அனைவரும் அறிந்திடும் விதத்தில் சென்னை விமான நிலையத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட வேண்டும். பெருந்தலைவர் காமராஜ் பெயரும், அறிஞர் அண்ணாவின் பெயரும் நீக்கப்பட மாட்டாது என அறிவித்திருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு கூறினர்.
Tags:
Chennai Airport Anna Kamaraj names not removed Airport Officer RTI சென்னை விமான நிலைய அண்ணா காமராஜ் பெயர்கள் நீக்கம் இல்லை விமான நிலைய அதிகாரி ஆர்டிஐமேலும் செய்திகள்
தமிழக அரசு, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்வுக்கு உடனடியாக விலக்கு பெற வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பிணிநீக்கி நம் உயிர்காக்கும் மருத்துவர்களைப் போற்றிடுவோம் :முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்து!!
பள்ளிகளில் மாஸ்க் கட்டாயம்..உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும்... பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!
ஜூலை 01: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை
ஓபிஎஸ் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி நிராகரித்ததால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் சுயேச்சையாக போட்டி; கட்சி தொண்டர்கள் கடும் அதிருப்தி
பெரியபாளையம் பவானியம்மனுக்கு காணிக்கையாக வந்த 130 கிலோ பொன் நகைளை அமைச்சர் சேகர்பாபு வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தார்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்