SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஆக.10ம் தேதி வரை நீட்டிப்பு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..1

2021-08-04@ 17:19:48

டெல்லி: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஆக.10ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒருங்கிணைந்த நுழைவு தேர்வாக ‘நீட்’ உள்ளது. இந்திய மருத்துவ குழுமம் சட்டம் - 1956 மற்றும் பல் மருத்துவர் சட்டம் 1948-ல், கடந்த 2018-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, இந்த நுழைவுத்தேர்வு கொண்டு வரப்பட்டது. அகில இந்திய மருத்துவ குழும இடைநிலை கல்வி வாரியத்தால் இத்தேர்வு நடத்தப்பட்டது. 2019-ம் ஆண்டு முதல் இந்த நுழைவுத் தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 13-ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 6-ம் தேதி வரை நீட்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ntaneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 10ஆம் தேதிவரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்டு 10 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 10 இரவு 11.50 மணி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்