SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடிகர் சஞ்சய் தத் முன்விடுதலை விவரங்களை வழங்கக்கோரி பேரறிவாளன் மனு!: இறுதி விசாரணைக்கு ஏற்றது மும்பை ஐகோர்ட்..!!

2021-08-04@ 15:18:58

மும்பை: நடிகர் சஞ்சய் தத் முன் விடுதலை தொடர்பான விவரங்களை வழங்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் இறுதி விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட குற்றவாளியான நடிகர் சஞ்சய் தத்துக்கு பலமுறை பரோல் வழங்கப்பட்ட நிலையில், தண்டனை காலம் முடியும் முன்னரே முன்விடுதலை செய்யப்பட்டார். 256 நாட்களுக்கு முன்பாகவே அவர் விடுதலை செய்யப்பட்டது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் மும்பை உயர்நீதிமன்றத்தில் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், நடிகர் சஞ்சய் தத் முன்விடுதலை குறித்த தகவல்கள், எந்த அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டார் என்ற விவரங்கள் ஆகியவற்றை தர வேண்டும் என பேரறிவாளன் கூறியிருந்தார். இந்நிலையில் பேரறிவாளனின் மனுவை இறுதி விசாரணைக்கு பட்டியலிட மும்பை உயர்நீதிமன்றம் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது. பதிவாளர் இறுதி விசாரணைக்கு பட்டியலிட தவறினால் மீண்டும் நீதிபதிகள் முன்பு முறையிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்