SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ராகுல்காந்தி நேரில் ஆறுதல்!: பக்கபலமாக இருப்போம் என உறுதி..!!

2021-08-04@ 13:02:08

டெல்லி: டெல்லியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 9 வயது சிறுமியின் குடும்பத்தினருக்கு ராகுல்காந்தி நேரில் ஆறுதல் தெரிவித்தார். ஆகஸ்ட் 1ம் தேதி டெல்லி காண்ட் பகுதியை அடுத்த பழைய நங்களில் தண்ணீர் எடுப்பதற்காக மயானத்திற்கு சென்ற 9 வயது தலித் சிறுமி, கோயில் பூசாரி உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். காவல்துறைக்கு தெரிவிக்காமல் தடயங்களை அழிக்கும் விதமாக குடும்பத்தினரை மிரட்டி அவசர அவசரமாக சிறுமியின் சடலத்தையும் எரித்துள்ளனர். சிறுமிக்கு நீதி கோரி பீம் மார்மி அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கொலை, தடயங்களை அழித்தல், போக்சோ, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி கொடூர கொலைக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தலித் சிறுமியும் நாட்டின் மகள்தான் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் கொல்லப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்ற ராகுல்காந்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுமியின் குடும்பத்தினரிடம் பேசினேன். சிறுமி கொலைக்கு நீதி வேண்டும், வேறு எதுவும் தேவையில்லை. குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருப்போம் என்று குறிப்பிட்டார்.

மேலும் நீதி கிடைக்க அவர்களுக்கு பக்க பலமாக இருப்போம் என்றும் உறுதிபட கூறினார். சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி தென்மேற்கு பகுதி காவல்துறை துணை ஆணையர் 48 மணி நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்