SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேப்பனஹள்ளி அருகே அலகு குத்தி 40 அடி கிரேனில் தொங்கிய பக்தர் விழுந்து காயம்

2021-08-04@ 10:51:28

*வைரலான வீடியோவால் பரபரப்பு

வேப்பனஹள்ளி : கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாட அரசு தடை விதித்திருந்தது. கோயில்களில் சுவாமிக்கு பூஜை செய்ய மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் வழக்கம்போல் காவடி எடுத்து வந்து வேண்டுதல் நிறைவேற்றினர்.

அதன்படி, வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட எட்ரப்பள்ளி கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில், ஆடிக்கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது. இதற்காக சின்னகொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (36) உள்பட 4 பேர், நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் விமான அலகு (முதுகில் அலகு குத்திக்கொண்டு) குத்தி ராட்சத கிரேனில், 40 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கியவாறு கோயிலுக்கு வந்தனர்.

மேட்டுப்பாளையம் என்னுமிடத்தில் கிரேன் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக முதுகில் குத்தியிருந்த கொக்கி சதையை கிழித்ததால் ஆகாஷ் சுமார் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில், அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனால், மற்ற மூவரும் கீழே இறங்கி, நடந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றினர்.

இந்த சம்பவத்தை அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பரவவிட்டார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

 • cryingroom-19

  இனி வீட்டில் அழுகாதீங்க!: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்