SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா காலத்தில் கிராமசபா வைத்து அரசியல் செய்யும் நடிகரின் லீலைகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-08-04@ 00:03:33

‘‘விளையாட்டு மைதானம் கட்டி அறநிலையத்துறைக்கு விளையாட்டு காட்டும் இலை நிர்வாகி விளையாட்டு வீரரா...’’ சந்தேகத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஆக்கிரமிப்பில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் அதிரடியாக மீட்கப்பட்டு வருகிறது. இதனால் கலக்கத்தில் ஆழ்ந்திருப்பவர்களில் 90சதவீதம் பேர்,  இலைக்கட்சிகாரர்கள்தானாம். இதில் மாங்கனி மாவட்டத்துல கோயில் நிலங்களை மீட்க  குரல் கொடுத்து வரும் ஒருத்தரு, சமீபத்தில் அதிகாரிகளுடன் அதியமான்கோட்டை மாவட்டத்திற்கு ஆய்வுக்கு போனாராம்.
அப்போது இலையின் நிர்வாகி ஒருவர் வெளிப்படையாகவே, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து அதிர வச்சாராம். இது ஒருபுறமிருக்க மாங்கனி மாவட்டத்தில் வைகுந்தம் இலைகட்சியின் ஊராட்சி தலைவரின் கணவரு, கோயில் நிலத்தை அபகரித்ததோடு 30 சென்ட் நிலத்தில் ஒரு விளையாட்டு மைதானமே அமைத்து விட்டாராம். விசாரிச்சா விளையாட்டுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம். இவ்வளவு பெரிய நிலத்தை ஆக்கிரமிக்க சரியான காரணம் தேவை என்பதால், விளையாட்டின் பெயரை சொல்லி இடத்தை அமுக்க பார்க்கிறாராம். அது மட்டுமல்லாமல் சொந்த, பந்தங்களுக்கு வீடுகளையும், கடைகளையும் கட்டிக் கொடுத்திருக்கிறாராம். நிலங்கள் பறிப்பால் அதிர்ந்தபோன இலைக்கட்சிக்காரர், கோயில் நிலத்தில் பயன்பெறும் நீங்கள் எல்லாம், பல  வருஷமா இங்கேயே இருப்பது போன்ற ஆவணங்களை போலியாக தயார் செய்துடுங்க.. பிரச்னை என்று வந்தால் நாம் எதிர்கொள்ள வசதியாக இருக்கும் என்று உறவுகளுக்கு ஆக்கிரமிப்பு நிலத்தை எப்படி பாதுகாப்பது என்ற பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘டிரான்ஸ்பருக்காக ஆபிசில் வேலையே செய்யாமல் ஓபி அடிக்கும் அதிகாரிகளை என்ன செய்து திருத்துவது...’’ சீரியஸாக கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு கோவை மாநகராட்சியில் திட்டப்பணிகள் இழுத்தடிக்கப்பட்டு வருகிறதாம். தங்களை இந்த இடத்தில் இருந்து டிரான்ஸ்பர் செய்ய வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் இந்த மெத்தன போக்கு தந்திரத்தை கடைபிடிக்கிறாங்களாம். கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் சுமார் 50-க்கும் மேற்பட்ட இளநிலை பொறியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில், பெரும்பாலானவர்கள் மாநகராட்சி திட்டப்பணிகளில் முழு கவனம்  செலுத்துவது இல்லை. காரணம், முந்தைய ஆட்சிபோல், தற்போதைய ஆட்சியில் பருப்பு  எதுவும் வேகவில்லை. பழைய தவறுகளில் இருந்து தப்பிக்க டிரான்ஸ்பர் கேட்கிறாங்க. இவர்களில் ஐந்துக்கும் மேற்பட்ட இளநிலை பொறியாளர்கள் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பணிபுரிகின்றனர். இவர்கள், சுத்தமாக எந்த பணியையும் செய்வது இல்லை. அன்றாடம் ஆபீசுக்கு வந்து, காற்று வாங்கிவிட்டு சென்று விடுகின்றனர். மாநகராட்சி திட்டப்பணிகளில், ஒரு சில உதவி பொறியாளர்கள் மட்டுமே ஈடுபாட்டுடன் முழுமையாக பணிபுரிகின்றனர். மற்றவர்கள் எல்லோரும் ஓ.பி. அடிக்கிறாங்க ஸ்மார்ட்சிட்டி பணிகளை கவனித்து வரும் ஜே.என்.என்.யூ.ஆர்.எம்  திட்டத்தின்கீழ் பணியாற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் ரொம்பவே உஷார். கிடைப்பது முறையாக கிடைத்தால்தான் பைல் நகரும் என்பதில் தீவிரம் காட்டி  வருகின்றனர். காரணம், இவர்கள் எல்லோரும் முந்தைய ஆட்சி காலத்தில் ரொம்பவே  விசுவாசியாக இருந்தவர்கள். இதுபோன்ற பொறியாளர்களை அடையாளம் கண்டு, டிரான்ஸ்பர் செய்யாமல் சஸ்பெண்ட் செய்து அவர்கள் கடந்த காலத்தில் செய்த தவறுகளை தோண்டி எடுத்து பனிஷ்மென்ட் தர வேண்டும் என்ற குரல் கோவையில் ஓங்கி ஒலிக்கிறது....’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கொரோனா 3வது அலையால் நாடே பதறும்போது... அதுல அரசியல் செய்ய நினைக்கும் நடிகரைப் பற்றிச் சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை  மாவட்ட உயரதிகாரியை, கடந்த வாரம் இலை எம்எல்ஏக்கள் 9 பேர் நேரில்  சந்தித்து, கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, மாவட்ட உயரதிகாரி வழக்கம்போல், தனது சீட்டில் அமர்ந்து மனு வாங்கினார்.  அவரை, எழுந்து நின்று மனு வாங்கும்படி இலை எம்எல்ஏக்கள் மிரட்டல் விடுத்தனர். இதன்பிறகு, அவர் எழுந்து நின்று மனு வாங்கினார். இந்த சர்ச்சை அடங்குவதற்குள், கட்சி தொடங்கி உள்ள நடிகர், நேற்று முன்தினம் மாவட்ட உயரதிகாரியை சந்தித்து மனு அளித்தார். அப்போது, மாவட்ட உயரதிகாரி, யாரும் எதிர்பார்க்காமல் அவரே எழுந்து நின்று மனுவை பெற்றுக்கொண்டார். இதைப்பார்த்து, நடிகர் நெகிழ்ந்து போனார்.
அத்துடன்,  கோவை மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபை  கூட்டம் நடத்த வேண்டும், அதில் பங்கேற்க தனக்கு அனுமதி அளிக்கவேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட உயரதிகாரி, பரிசீலித்து உரிய  நடவடிக்கை எடுக்கப்படும்னு சொன்னாராம். கட்சியை கோவையில் பலமாக்க நடிகர் தரப்பு நினைப்பது தப்பில்லை. இன்றைக்கு கோவையில் தான் கொரோனா தொற்று அதிகமா இருக்கு... 3வது அலை வேற வரப்போகுது என்ற ஐசிஎம்ஆர் சொல்றாங்க... கிராமசபை என்ற பெயரில் பெரிய கூட்டத்தை கூட்டி கொரோனா 3வது அலைக்கு வித்திடுவது தேவையா.. அரசியலை எப்படி, எப்போது வேண்டுமானால் செய்யலாம்... அது மக்களின் உயிர்களோடு விளையாடுவதாக இருக்கக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள் சொல்லி வேதனைப்படறாங்க... அரசியல் செய்ய வேறு இடங்கள் இருக்கு... அதற்கு கிராமசபை மூலம் கொரோனா பரவாமல் இருக்க நினைக்க வேண்டுமே தவிர... நோய் வந்த பின்னர் காப்பது நல்லது இல்லைன்னும் பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

 • iceland-16

  ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

 • dolphins-15

  டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

 • anna-15

  பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

 • gujarat-14

  கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்