SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் முடிவடையவில்லை: மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் பேட்டி

2021-08-03@ 19:08:01

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் முடிவடையவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2ம் ஆலை பாதிப்பு மற்றும் பலி, கடந்த ஒரு மாதமாக குறைந்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்துள்ளன. 100% பணியாளர்களுடன் தொழிற்சாலை மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்குவதால் இயல்பு நிலை திரும்பி உள்ளது. கடைவீதிகள், வழிப்பாட்டு தலங்கள், பொது இடங்களில் மக்கள் அதிக கூடி வருகின்றனர். அதில், பெரும்பாலானோர் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை காற்றி பறக்கவிட்டுள்ளனர்.

இதனால், கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தொற்று அதிகரிக்கும் மாநிலங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க ஒன்றிய அரசு வலியுறுத்தி வருகிறது. கொரோனா 3வது அலை செப்டம்பர் அல்லது அக்டோபரில் உச்சம் தொடும், குறிப்பாக குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; உலகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.  இந்தியாவை பொருத்தவரையில் 2-வது அலை பரவல் இன்னும் ஓயவில்லை. கேரளா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மாநிலங்களில் உள்ளிட்ட 44 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.

222 மாவட்டங்களில் பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. கேரளாவின் 10 மாவட்டங்கள் உட்பட 18 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வரும் போக்கு காணப்படுகிறது. இந்த 18 மாவட்டங்களும் 47.5% பாதிப்புகளை கொண்டுள்ளன. 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். அனைவரையும் கருத்தில் கொள்ள வேண்டும். கேரளாவில் மட்டும்தான் கொரோனாவுக்கு அதிக அளவில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். தேசிய அளவில் அதிகமான நபர்கள் சிகிச்சை பெறும் மாநிலங்களில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அதிகரிக்கிறது. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தொடர்பாக இறுதி முடிவுக்கு காத்திருக்கிறோம் என கூறினார்.

வி.கே.பால்
இதனை தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கான நிதிஆயோக் உறுப்பினர் வி.கே.பால்; குழந்தைகளுக்கான கோவேக்சின் தடுப்பூசி தற்போது பரிசோதனையில் உள்ளது, இறுதி  பரிந்துரைக்காக காத்திருக்கிறோம், இன்னும் இரண்டு வாரங்கள் அல்லது அதற்கு முன்பே தெரியவரும் என கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sudan-26

  சூடானில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்!: பிரதமர், அமைச்சர்கள் கைது..மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்..!!

 • karnataka-schools-25

  20 மாதங்களுக்கு பின் கர்நாடகத்தில் தொடக்க பள்ளிகள் திறப்பு!: ஆர்வமுடன் பள்ளி செல்லும் மழலைகள்..!!

 • wheel-uae-25

  250 மீ. உயரம்...1,750 பேர் பயணிக்கலாம்!: உலகிலேயே மிகப்பெரிய ராட்டினம் ஐக்கிய அரபு அமீரகத்தில் திறப்பு..!!

 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்