SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% இடஒதுக்கீடு தொடர்பாக ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

2021-08-03@ 14:48:28

சென்னை: எம்பிபிஎஸ், எம்டிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி முன்பு நடைபெற்று வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரையின் அடிப்படையில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதில் நீதிமன்ற அவமதிப்பு ஏதும் செய்யவில்லை என்றும் மறுப்பு தெரிவித்தார். ஆனால் தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை. முழுமையாக உயர்நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என்று கூறி திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு மொத்த இடஒதுக்கீடான 50%க்குள் வருகிறதா? இல்லையா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதற்கு கால அவகாசம் கோரியதால் இந்த வழக்கை வருகின்ற திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • wildfire-13

    கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்..!!

  • plane-crashe-13

    அமெரிக்காவில் குடியிருப்பு மீது விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்!: ஏராளமான வாகனங்கள், வீடுகள் தீக்கிரை..2 பேர் பலி..!!

  • wine-12

    இஸ்ரேலில் மண்ணில் புதையுண்டு கிடந்த 1,500 ஆண்டுகள் பழமையான ஒயின் தயாரிப்பு ஆலை கண்டெடுப்பு..!!

  • Tiruppp1

    திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்... கண்கவர் புகைப்படங்கள்!!

  • andhratirupp

    திருமலை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பித்த ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்