SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழ்நாட்டில் 03, 04-ம் தேதி நீலகிரி, கோயம்பத்தூர், சேலம் மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாயுப்பு.: வானிலை ஆய்வு மையம் தகவல்

2021-08-03@ 14:41:38

சென்னை:  தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 03, 04-ம் தேதி நீலகிரி, கோயம்பத்தூர், சேலம், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

05, 06-ம் தேதி நீலகிரி, கோயம்பத்தூர், சேலம், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய ஒருசில உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் 07ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்பத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும். மேலும் அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதனையடுத்து 03 முதல் 07-ம் தேதி வரை தென் மேற்கு வங்க கடல் மற்றும் தென் கிழக்கு இலங்கை பகுதிகள் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும்  03 முதல் 07-ம் தேதி வரை தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளை செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்