SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

'இலவச பயணத்தை ஈடுசெய்ய அரசு பேருந்துகளில் ஆண்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கவில்லை'!: ஓ.பி.எஸ். கூறிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்..!!

2021-08-03@ 14:28:38

சென்னை: அரசு பேருந்துகளில் மகளிருக்கு கட்டண விலக்கு அளித்ததால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய ஆண்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய குற்றச்சாட்டிற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு உள்ளூர் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவதால் ஆண்களுக்கு பயண கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று கூறியுள்ளார்.

பழைய கட்டணமே தொடர்வதாக கூறிய அவர், சில இடங்களில் 5 ரூபாய் கட்டணம் 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளது முற்றிலும் தவறானது என்று தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், தனது இருப்பை காட்டிக்கொள்ளவும் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருப்பதாக ராஜகண்ணப்பன் விமர்சித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டிய வழித்தடத்தில் தவறு இழைத்த நடத்துநர் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறிய போக்குவரத்துத்துறை அமைச்சர், அரசு பேருந்துகளில் தவறு நடப்பது தொடர்பாக யார் புகார் அளித்தாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அரசு பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணிக்கும் மகளிரின் விகிதம் 60 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கூறியுள்ள அவர், இதுவரை 6 கோடியே 53 லட்சம் மகளிர் இலவச பயணம் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்