SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாலு சீட்டு ஜெயிச்சுட்டு தாமரை ஆட்கள் போடும் ஆட்டத்தை பற்றிச் சொல்கிறார்: wiki யானந்தா

2021-08-03@ 01:54:09

‘‘தன்னை யாரும் அசைக்க முடியாது என்று கூறி கல்லா கட்டும் அதிகாரியை எந்த துறையில் அதிரடிக்கிறாரு...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘உணவு  கடத்தல் தடுப்பு பிரிவில் ஒரு சாமி மூணு வருஷமா அடிக்கும் கொள்ளையை சொல்லி மாளாதாம். எல்லோருக்கும் ரெண்டு வருஷம் தான் சிறப்பு பிரிவுல இருக்கலாம்னு அரசு ஆணையே இருக்காம். காகிதத்தால ஆன அரசாணைதானே என்று அதை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு தனக்கு வேண்டிய ஆட்களை பிடித்து தொடர்ந்து அதே துறையில் நீடிக்கிறாராம். அவரு அந்த துறையில அடித்த டென்டை யாரும் அசைக்க கூட முடியவில்லையாம். அதிலும் உளவு பார்க்கும் வேளை செய்வாதாக சொல்லி கடத்தல்காரங்களோட கூட்டு வச்சு கொள்ளை கமிஷனை பார்க்கிறாராம். இந்த பணத்ைத வைத்து பல வீடுகளை கட்டிவிட்டார் என்றால் பாருங்க... வங்கி லாக்கரில் பல லட்சம் தூங்கிக் கொண்டு இருக்காம். அடிக்கும் பணத்தில் மேல் அதிகாரிகளுக்கு கொடுத்து அவர்களை சரி  பண்ணிட்டேனு சொல்றாரு... அது உண்மையா, பொய்யா என்பது யாருக்கு தெரியும். இந்த துறையில இருந்து என்னை யாரும் அசைக்க முடியாதுனு சொல்லி மாநிலம் முழுதும்  மாமூல் வேட்டை தடபுடலா நடத்தும் தளவாயாக செயல்படும் சாமி தான் இப்போ கடத்தல் பிரிவில்  ராஜாவாக இருந்து வருகிறாராம். இப்படியே போனால் ஏழைகளுக்கு சேர வேண்டிய ெபாருள் கடத்தல்காரர்களுக்கு தான் போய் சேரும் என்று அதே துறையில் வேலை செய்றவங்க சொல்றாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘காக்கி துறையில் என்ன சலசலப்பு...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘சீதை  நாயகர் பெயரிலான மாவட்டத்தில் ‘வன்மை’ பிரிவின் தலைமை போலீஸ் அதிகாரியாக ‘ராமேஸ்வரம் நாயகர்’ பெயரிலானவர் இருக்கிறார். கடந்த ஆட்சியில் 2  ஆண்டுகளுக்கு முன்பு இதே மாவட்டத்தில் துணை போலீஸ் அதிகாரியாக இருந்தபோது,  அப்போதைய ஆளும் கட்சிக்காரர்களுக்கு ஆதரவாளராகவும், வசூல் உள்ளிட்ட  முறைகேடுகளிலும் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதால், வடமாநில நதி பெயரில்  முடிகிற மாவட்டத்துக்கு தூக்கியடிக்கப்பட்டார். சில மாதங்களுக்கு பிறகே, தன் சொந்த சொல்வாக்கை பயன்படுத்தி, பதவி உயர்வு பெற்று ‘சீதை நாயகர்’ பெயரிலான  மாவட்டத்துக்கு திரும்பியுள்ளாராம்.  மீண்டும் வசூல் துவங்கி பலதரப்பட்ட  முறைகேடுகளில் ஈடுபடுவதுடன், பழைய பாசத்தில் இலைக்கட்சியினருக்கு  ஆதரவாகவும் இவர் செயல்பட்டு வருவதாக தொடர் புகார்கள் குவிகின்றன. இது குறித்து சக   போலீசாரே, திருந்தாத ஜென்மங்கள் இருந்து என்ன லாபம்னு பாட்டு பாடுவதோடு நிற்காமல், உயரதிகாரிகளுக்கு மனுவை தட்டி விட்டு இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நாலு சீட்டுல ஜெயிச்சதுக்கே கோஷ்டிபுசலா.. தாமரை ஆட்களோடு ஆட்டத்தை தாங்க முடியல என்று அவங்க கட்சிக்காரங்களே வருத்தப்படறாங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தாமரை  கட்சியில் அல்வா மாவட்ட தலைமையும், அந்த ஊர் எம்எல்ஏவும் முட்டிக் கொண்டு  நிற்கிறார்களாம். இந்த கட்சி தமிழகத்தில் வளர்ந்து வருவதாக அதன் தலைவர்கள்  கூறினாலும் கோஷ்டி தான் வளர்கிறது. சமீபத்தில் அல்வா மாவட்ட தலைமை  கட்சியின் ஒரு சில அணிகளுக்கு இருந்த நிர்வாகிகளை நீக்கி விட்டு புதிய  நிர்வாகிகளை நியமிச்சுருக்கு. இந்த பட்டியல் வெளியாகி ஒரு வாரம் கழித்து  அந்த ஊரின் எம்எல்ஏ, நீக்கப்பட்ட நிர்வாகிகளின் பட்டியலை போட்டு புதிய  நிர்வாகிகள் என அறிக்கை விட்டுருக்காரு. இரண்டு பட்டியலையும் பார்த்து  நிர்வாகிகள் ரொம்பவே குழம்பிப் போயிருக்காங்க. கட்சி நிர்வாகிகளை நியமிக்க  மாவட்ட தலைமைக்கு அதிகாரமா? எம்எல்ஏவுக்கு அதிகாரமா? என பெரிய விவாதமே  நடந்து வருகிறது. நாலு சீட்டு ஜெயித்ததுக்கே இப்படி கோஷ்டி பூசலை தொடங்கி இருக்காங்களே... 40 சீட்டு ெஜயித்து இருந்தால்... 20:20 மேட்ச் போல இரண்டு தரப்பாக பிரிஞ்சு இருப்பாங்க போல...’’ என்று கீழ்நிலை தொண்டர்கள் புலம்புகிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அல்வா நகருக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் மக்களுக்கு வரப்பிரசாதமா.. அதிகாரிகளுக்க வரப்பிரசாதமா...’’ என்று சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘ஸ்மார்ட் சிட்டி திட்டம் வந்த நாளில் இருந்தே அல்வா நகருல அதிகாரிகள் காட்டில அடைமழையாம். கடந்த இலை ஆட்சியில நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை புதுப்பிக்க ஐடியா பண்ணி வேலைய தொடங்குன அதிகாரிகளுக்கு, பழம் நழுவி அப்படியே பால்ல தொபுக்கடீர்னு விழுந்த மாதிரி ஒரே கொண்டாட்டம்தான். பஸ் நிலைய வளாகத்துல 30 அடி ஆழம் வரை ஆற்று மணல், தாதுமணல் தென்பட, அப்படியே அள்ளி லபக்கிட்டு போய்ட்டாங்க. இந்த மணலை ஏலம் விடற சாக்குல கோடிக்கணக்கான பணத்தை சுருட்டிட்டாங்க. முன்னாள் கவுன்சிலர் ஒருத்தரு வழக்கு போட, இப்ப சமாசாரம் ஐகோர்ட் படியேறி நிக்குது. கட்டுமானப் பணி நடக்கும் முன்பே மணல் கொள்ளைக்கு முகாந்திரம் இருக்குன்னு சொல்லிட்டு, ஐகோர்ட்டும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு போட்டிருக்கு. இதுக்கிடையில, மாநகராட்சியில கோலோச்சிக்கிட்டு இருந்த மலையாளத்து அதிகாரியும் ராஜினாமா பண்ணிட்டு போய்ட்டாரு. சிபிசிஐடி விசாரணை தீவிரமாச்சுன்னா யாரு கையில எல்லாம் விலங்கு மாட்டுவாங்களோன்னு மாநகராட்சி அதிகாரிகள் வட்டாரமே கலக்கத்துல இருக்குதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

 • iceland-16

  ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

 • dolphins-15

  டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்