பல்லடம் பகுதியில் தொழிலாளியிடம் மொபட் பறித்த போலீஸ்காரர் கைது: சிறையில் அடைப்பு
2021-08-03@ 01:35:32

பொங்கலூர்: பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிபவர் ராஜேஷ். இவர் கடந்த 30ம் தேதி பல்லடம் அருகே உள்ள சிங்கனூர் அரசு மதுபான கடை முன்பு சீருடை இல்லாமல் நின்றார். அப்போது அந்த வழியே கட்டிடத் தொழிலாளி பூவரசன் மொபட்டில் வந்தார். அவரைத் தடுத்து நிறுத்திய ராஜேஷ், வண்டியின் ஆர்.சி.புக், லைசென்சை எடு என கேட்டு மிரட்டியுள்ளார். ஆர்.சி. புக் வீட்டில் உள்ளது என பூவரசன் கூறினார். இதையடுத்து மொபட்டை இங்கேயே நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்று ஆர்.சி. புக்கை எடுத்து வா என்று போலீஸ்காரர் ராஜேஷ் கூறினார்.
பூவரசன் வீட்டிற்கு நடந்து சென்று ஆர்.சி. புக்கை எடுத்து வந்தார். திரும்பி வந்து பார்த்தபோது அங்கு போலீஸ்காரரும் இல்லை. மொபட்டும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த பூவரசன் போலீஸ் கட்டு்ப்பாட்டு அறைக்கு போன் செய்து போலீஸ்காரர் மொபட்டை எடுத்து சென்றுவிட்டதாக புகார் செய்தார்.
இதையடுத்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின்பேரில், விசாரணை செய்தபோது அவிநாசிபாளையம் போலீஸ்காரர் ராஜேஷ் மொபட்டை வழிப்பறி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதி உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் செய்திகள்
சான்றிதழை போலி என்று உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம்: 20 ஆண்டுகளாக ஏமாற்றிய போலி வழக்கறிஞர் கைது...
தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட கர்நாடக வாலிபர் கைது-8 பைக்குகள் பறிமுதல்
விராலிமலை, ஆலங்குடி பகுதியில் கூடுதல் விலைக்கு விற்க பதுக்கிய 1000 மதுபாட்டில்கள் பறிமுதல்-4 பேர் கைது
சர்ச்சுக்கு வந்த சிறுவனை மிரட்டி ஓரினச்சேர்க்கை: பாதிரியார் கைது
அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது
பல்லடத்தில் நள்ளிரவு துணிகரம்: ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து எடுக்க முயன்ற கொள்ளையர்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!