SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தங்கம் விலை மேலும் மாற்றம் 2 நாட்களில் சவரன் ரூ.368 குறைந்தது

2021-08-03@ 00:01:09

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 குறைந்தது. 2 நாட்களில் மட்டும் சவரன் ரூ.368 குறைந்துள்ளது. தங்கம் விலை ஒரு நிலையான நிலையில் இல்லாமல் ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நாட்களில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தும் வருகிறது. கடந்த 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.536 அதிகரித்தது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த நிலையில் கடந்த 31ம் தேதி(சனிக்கிழமை) யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு ரூ.21 குறைந்து ஒரு கிராம் ரூ.4,548க்கும், சவரனுக்கு ரூ.168 குறைந்து ஒரு சவரன் ரூ.36,384க்கும் விற்கப்பட்டது.

தொடர்ச்சியாக உயர்ந்து வந்த தங்கம் விலை குறைந்தது, நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலாக இருந்தது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். அதனால், அன்றைய தினம் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது.ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று காலை தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் குறைந்தது. கிராமுக்கு ரூ.12 குறைந்து ஒரு கிராம் ரூ.4,536க்கும், சவரனுக்கு ரூ.96 குறைந்து ஒரு சவரன் ரூ.36,288க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் குறைந்தது. அதாவது சனிக்கிழமை விலையை விட கிராமுக்கு ரூ.25 குறைந்து ஓரு கிராம் ரூ.4,523க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.36,184க்கும் விற்கப்பட்டது. 2 நாட்களில் மட்டும் சவரன் ரூ.368 குறைந்துள்ளது. தங்கம் விலை குறைந்து வருவது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

  • anna-15

    பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

  • gujarat-14

    கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்