SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஃபிரான்ஸ் அரசின் 'ஹெல்த் பாஸ்' முறையை எதிர்த்து பாரீசில் ஆயிரக்கணக்கானோர் பேரணி!: கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டதால் பதற்றம்..!!

2021-08-02@ 11:23:28

பாரிஸ்: பிரான்சில் மக்கள் பொது இடங்களுக்கு செல்ல கட்டுப்பாடு விதிக்க உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். டெல்டா வகை கோவிட் வைரஸ் பரவலை தடுக்க பிரான்ஸ் அரசு 'ஹெல்த் பாஸ்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி வருகின்ற 9ம் தேதி முதல் திரையரங்குகள், சுற்றுலாத் தளங்கள், நீச்சல் குளங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு வருவோர் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கோவிட் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் அரசின் 'ஹெல்த் பாஸ்' முறைக்கு பிரான்ஸ் முழுவதும் பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ளது. பாரிசில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பேரணியாக சென்று 'ஹெல்த் பாஸ்' முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து அங்குள்ள போராட்டக்காரர் ஒருவர் தெரிவித்ததாவது, அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எனது செவிலியர் பணியை ராஜினாமா செய்துவிட்டேன். அரசு எங்களை மிரட்டுகிறது. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அரசு தீர்மானம் செய்ய கூடாது. முதல் அலையில் மக்களை அவர்கள் தவறாக வழிநடத்தினர். இப்பொது திடீரென தடுப்பூசி போட்டு கொள்ளாததால் நாங்கள் பிறருக்கு தொற்றை பரப்புகிறோம் என்று கூறுகிறார்கள்.

கட்டுப்பாடுகளை எங்கள் மீது திணிக்க முடியாது என்று குறிப்பிட்டார். ஒருகட்டத்தில் பேரணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்டனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக்காரர்களை கலைக்க பல இடங்களில் கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டன. தண்ணீரை பீழ்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்க முற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. போராட்டம் தொடர்பாக 50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து இழுத்து சென்றனர்.

பாரிசில் போராட்டங்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் 4,000 காவலர்கள் மற்றும் கலவரங்கள் தடுப்பு பிரிவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் தினமும் 20,000 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி வரும் நிலையில் பரவலை குறைக்கும் நோக்கில் 'ஹெல்த் பாஸ்' முறைக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iceberg-boat-23

  இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

 • thailand-taxi-23

  தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்