SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குருநானக் கல்லூரி சார்பில் தரவு பகுப்பாய்வு பயிற்சி: கல்வி நிறுவனம் தகவல்

2021-08-01@ 00:44:41

சென்னை:குரு நானக் கல்லூரி சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ்ஜி அவர்களின் 500 வது பிறந்ததினம் நினைவாக குரு நானக் கல்விச் சங்கத்தால் (GNES) 1971 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. குரு நானக் கல்லூரி தென்சென்னை, வேளச்சேரியில் பசுமை நிறைந்த 25 ஏக்கர் வளாகத்தில் அமைந்துள்ளது. குருநானக் கல்லூரியின் உன்னத நோக்கம் சமூக-பொருளாதார பின்புலம், ஜாதி, இனம் அல்லது மதம் பாகுபாடின்றி, அனைவருக்கும் தரமான கல்வி அளிப்பதே ஆகும். இதை கருத்தில் கொண்டு ‘அனைவருக்கும் பலன்’ என்ற பொருள் தரும் சீக்கிய பிரார்த்தனை வாசகமான ‘புரோ போனோ பப்ளிகோ’ என்பதே கல்லூரியின் கோட்பாட்டு வாசகமாகும்.

குரு நானக் கல்லூரி எஸ்.ஏ.எஸ் இந்தியா பிரைவேட் லிமிடெடுடன் இணைந்து தரவு பகுப்பாய்வில் பி.எஸ்சி., பட்டப் படிப்பை தொடங்கியிருக்கும் சென்னை மாநகரில் முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். எஸ்ஏஎஸ் தங்கள் பட்டத்துடன் சர்வதேச சான்றிதழ் வழங்கும். எஸ்ஏஎஸ் கருவி உலகில் வெற்றிகர முதன்மை 500 நிறுவனங்கள் மற்றும் நம் நாட்டில் முன்னணி தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது. கல்லூரி தகவல் தொழிற்நுட்பம் பயிற்சிகளுக்கான தரமான புலத்துறை ஆசிரியர்கள் மற்றும் உலகத்தர கட்டமைப்பை கொண்டிருக்கிறது. கல்லூரியில் பி.எஸ்சி. (சிஎஸ்), பிசிஏ, எம்சிஏ, பி.எஸ்சி.(ஐடி), பி.காம் (ஐஎஸ்எம்) போன்ற பல்வேறு தகவல் தொழிற்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இந்த பயிற்சி பகுப்பாய்வு துறையில் உள்ளகப் பயிற்சி மற்றும் பணியமர்வினை பெறுவதற்கு இளம் பட்டதாரிகளுக்கு வசதியாக அமையும். உயர்ந்த சம்பளத்தில் உலகில் மிகவும் நாடப்படும் தொழில்முறையாளர்களாக திறன்சார் தரவு பகுப்பாய்வாளர்கள் விளங்குகிறார்கள். வர்த்தக வளர்ச்சியை தூண்டுவதற்கு தரவு பகுப்பாய்வுகளை சார்ந்து அனைத்து வகை வர்த்தகங்கள் மற்றும் நிறுவனங்களில் தரவுகளின் தேவை வளர்ந்து வருகிறது. எனவே, தரவு பகுப்பாய்வு என்பது தகவல் தொழிற்நுட்பம் துறையில் மட்டுமின்றி உற்பத்தி, விற்பனை, சுகாதாரநலம், தொலைத்தொடர்பு, வங்கி சேவை மற்றும் நிதி, கட்டுமானம், போக்குவரத்து, ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் பிற அரசு துறைகளிலும் வேலைவாய்ப்பு அளிக்கிறது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

 • china_taiwan

  தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

 • guinness-record-pull-ups-08

  பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

 • egypt-sun-temple-8

  எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்