SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டூவீலர் ஓட்டிக்கொண்டு டிவி சீரியல் பார்த்த நபரின் வீடியோ வைரல்

2021-07-31@ 05:46:57

கோவை:  கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் டூவீலரில் சென்று கொண்டிருந்த ஒருவர், தனது மொபைல் போனை டூவீலரில் பொருத்திகொண்டு டிவி சீரியலை பார்த்துக்கொண்டே வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார். இதனை பார்த்த மற்றொரு வாகன ஓட்டி அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.  அந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் கண்ணப்பன் நகரை சேர்ந்த முத்துசாமி (35) என்பதும்,  தனியார் மசாலா நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.  இதையடுத்து போலீசார் அவர் மீது வாகனத்தை இயக்கும் போது செல்போன் பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் அத்துடன் ரூ.1,200 அபராதம் விதிக்கப்பட்டது.  மேலும் அவருடைய வாகனத்தில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் ஸ்டாண்ட் அகற்றப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்