SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆன்லைன் அலகுத் தேர்வு பள்ளி மாணவர்களுக்கு அட்டவணை வெளியீடு

2021-07-31@ 04:06:03

சென்னை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் அலகுத் தேர்வு நடத்துவதற்கான அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அலகுத் தேர்வுக்கான அட்டவணைகளை தயார் செய்து அனுப்பி வருகின்றனர். தேர்வுக்கான கேள்வித்தாள்கள்  அனைத்தையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தயார் செய்து, மாணவர்களின்  வாட்ஸ்அப் எண்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.

அந்த கேள்வித்தாளுக்கு வழக்கம் போல மாணவர்கள் வெள்ளைத் தாளில் விடைகளை எழுதி, அதை செல்போனில் படம் பிடித்து உரிய பாட ஆசிரியர்களுக்கு செல்போன் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.  சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனுப்பியுள்ள அட்டவணையில் பத்தாம் வகுப்புக்கான ஆன்லைன் தேர்வுகள் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 11ம் தேதி வரையும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 13ம் தேதி வரையும் நடத்த வேண்டும் என்று தெரித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்