SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரியல் எஸ்டேட் வணிக இணையதளம்: முதல்வர் துவக்கிவைப்பு

2021-07-31@ 03:44:29

சென்னை: கிரெடாய் ரியல் எஸ்டேட் புதிய இணையதளங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இந்தியாவின் ரியல் எஸ்டேட் தொழிலுக்கான அமைப்பின் ஓர் அங்கமான இந்திய ரியல் எஸ்டேட் சங்க மேம்பாட்டுக் கூட்டமைப்பு (கிரெடாய்), சார்பில் 2 இணையதளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே முதல் முறையாக வாட்ஸ் அப் செயலியோடு நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய வகை இணையதளம் ஆகும். வாடிக்கையாளரையும், கிரெடாய் விற்பனையாளர்களையும் தொடர்பில் இணைக்கும். மற்றொரு இணையதளத்தை பொருத்தவரை, வீடு வாங்குவது தொடர்பான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய ஒரே இணையதளமாக இது அமையும் வழக்கறிஞர்கள், டிசைன், வடிவமைப்பாளர்கள், டீலர்கள் என அனைவரது தொடர்புகளையும் இதில் காணலாம்.

 இது குறித்து கிரெடாய் சென்னையின் தலைவர் பதம் துகார் பேசும்போது, ‘கொரோனா காலத்தில், கிரெடாய் சார்பில் தமிழ்நாடு முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு 45 கோடி ரூபாய் மற்றும் 800 ஆக்சிஜன் வசதிகள் கொண்ட படுக்கைகள் அளிக்கப்பட்டது. இந்த உபகரணங்கள் கீழ்பாக்கம், ஓமந்தூர், ராயப்பேட்டை, அண்ணாநகர் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினோடு கைக்கோர்த்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவது பெருமை அளிக்கிறது. இந்த சூழலில், கிரெடாய் சார்பில் இரண்டு புதிய வணிக இணையதளங்களை அறிமுகம் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது.  தற்போதைய நிலவரப்படி, 7.5 கோடி சதுர அடி மதிப்பிலான கட்டுமான திட்டங்களை  கிரெடாய் மேற்கொண்டு வருகின்றது. அதுமட்டுமின்றி, சென்னையில் கட்டக்கூடிய  ஒவ்வொரு 100 வீடுகளில் 66 வீடுகள் கிரெடாய் நிறுவனத்தால் கட்டப்படுகின்றது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்