SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணியான மாஜி அமைச்சரின் ஊழலுக்கு உடந்தையாக இருந்த பெண் அதிகாரி செல்வாக்கோடு இருக்கும் மர்மத்தை சொல்கிறார்: wiki யானந்தா

2021-07-31@ 01:15:09

‘‘பழைய ஆட்சியின் விசுவாசியான பெண் அதிகாரி இப்போதும் போக்குக்காட்டி செல்வாக்கோடு வலம் வருவதாக சொல்கிறார்களே..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடந்த அதிமுக ஆட்சியின்போது மேற்கு மண்டலத்துக்குள் அதிகாரிகள் பதவி பெற வேண்டும் என்றால் அமைச்சர்கள் உதவி இல்லாமல் எதுவும் நடக்காது என்ற நிலை இருந்தது. குறிப்பாக 2 அமைச்சர்கள் ஆதரவு இருந்தால்தான் பதவி கிடைத்து வந்தது. இதனால் போலீஸ் துறையில் பணியாற்றிய 99 சதவீதம் பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு விட்டனர். அதில் மணியான அமைச்சருக்கு எல்லாமுமாக இருந்த 3 எழுத்து பெண் கூடுதல் எஸ்பி 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியதால் தேர்தல் விதிமுறைப்படி கோவையிலேயே பயிற்சி பள்ளிக்கு மாற்றப்பட்டார். ஆனாலும் அயல் பணி என்ற முறையில் மேற்கு மண்டல ஐஜி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அவர் அமைச்சருக்கு ஆதரவாக தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட்டு வந்தார். இதுவும் புகாராக வந்ததும், டிஜிபி அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். இவர் போலீசில் அப்போதைய அமைச்சருக்காக எல்லா வேலைகளையும் பார்த்து வந்தார் என்றால், மாநகராட்சியில் துணை கமிஷனராக பணியாற்றி வந்த மத்தியப்பிரதேச மாநில பிரபல நதியின் பெயரைக் கொண்ட பெண் அதிகாரி, அப்போதைய மணியான அமைச்சர், அவரது சகோதரர் ஆகியோரது ஊழலுக்கு உடந்தையாகவும், ஆலோசனை வழங்கியும் வந்தாராம். தேர்தல் நேரத்தில் மணியானவருக்காக கடுமையாக வேலை பார்த்தாராம். தற்போது ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு மணியானவருக்கு வேண்டியவர்கள் எல்லோரும் மாற்றப்படுவதால், இவரும் தூக்கியடிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டதாம். ஆனால் அவரோ, சில அதிகாரிகளைப் பிடித்து பக்கத்து மாவட்டமான திருப்பூரில் நில எடுப்புப் பிரிவுக்கு மாறுதல் வாங்கி வந்து விட்டாராம். அதிகாரிகளிடம் இவருக்கு இருக்கும் செல்வாக்கை கண்டு மற்ற அதிகாரிகள் அசந்து விட்டார்களாம். இப்போதும் மணியானவருக்கு சில மறைமுக உதவிகளை செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா.

  ‘‘கட்சி தாவ தயாராக இருக்கிறாராமே இலை கட்சி மாஜி எம்பி..’’
 ‘‘நெற்களஞ்சிய  மாவட்ட நாடாளுமன்ற தொகுதியில் 2014-19ம் ஆண்டில் இலைகட்சியில் எம்பியாக  இருந்து வந்தவர் பரசமானவர். எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராகவும் உள்ளார்.  முன்னாள் அமைச்சரான வைத்தியமானவரின் ஆதரவாளராக இருந்து வந்த பரசமானவர்  2019ல் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டாராம்..  அப்போது இந்த தொகுதி சைக்கிளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாம். இதற்கு  வைத்தியமானவர் பங்கு அதிகமாக இருந்ததால் பரசமானவரின் ஆதரவாளர்கள்  வைத்தியமானவர் மீது கடும் அதிருப்தியில் இருந்தார்களாம்... தற்போது நடந்து  முடிந்த சட்டமன்ற தேர்தலில் நெற்களஞ்சிய மாவட்ட சட்டமன்ற தொகுதியில்  போட்டியிட பரசமானவர் மீண்டும் வைத்தியமானவரிடம் சீட்டு கேட்டாராம்..ஆனால்...  கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பும்  அவருக்கு கை நழுவி போனதாம்.. இதனால்  சட்டமன்ற தேர்தலில் வைத்தியமானவருக்கு பணியாற்றாமல்  பரசமானவர் ஒதுங்கியே  இருந்தாராம்... இதனால் வைத்தியமானவருக்கும், பரசமானவருக்கும் இடையே ஏற்கனவே  இருந்த விரிசல் தற்போது தொழில் முதலீடுகளிலும்  மேலும் உச்சக்கட்டத்துக்கு  சென்று விட்டதாம்..
இதனால் கடும் அதிருப்திக்குள்ளான பரசமானவர் தனது  ஆதரவாளர்களுடன் திமுகவில் விரைவில் சேருவதற்காக காய் நகர்த்த தொடங்கி  விட்டாராம்.. சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி மிக சிறப்பாக  உள்ளதாகவும் புகழ்ந்தும் பேசி வைத்தியமானவருக்கு கடும் அதிர்ச்சியை  கொடுத்தாராம்... விரைவில் பரசமானவர் திமுகவில் இணைய உள்ள தகவல் தற்போது  வெளியே கசிய தொடங்கி இருப்பதால் நெற்களஞ்சிய மாவட்ட இலைகட்சியினர்,  வைத்தியமானவர் ஆதரவாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்களாம்’’ என்றார்  விக்கியானந்தா.

 ‘‘லாபம் பார்த்த ஜீக்கள் கலக்கத்தில் இருக்காங்க போல..’’ என சிரித்தார் பீட்டர் மாமா.
 ‘‘தமிழகத்தில்  கடந்த ஆட்சியில் தலைவிரித்தாட தொடங்கிய போதை பொருட்கள் விற்பனையை துரித  கதியில் ஒடுக்குவதற்காக போலீசாரோடு, பல்துறை அதிகாரிகளும் களத்தில்  குதிச்சிருக்காங்க. இதில் மாங்கனி மண்டலத்தில் கோடிக்கணக்கில்  போதை  பொருட்கள் சிக்குதாம். கர்நாடகா எல்லையாக கிரி மாவட்டம் இருப்பதால்  அங்கிருந்து தான் அதிகளவில் பான்பராக், குட்காவை கடத்திகிட்டு  வர்றாங்களாம். டிரைவர்கள் வண்டியோடு சிக்கிக் கொள்கின்றனர். ஆனால் அதற்கு  பின்புலமாக இருப்பவர்கள், கடந்த ஆட்சியில் செல்வாக்கோடு வலம் வந்த சில  நிர்வாகிகளாம். அதிலும் பான்பராக், குட்கா கடத்தல் விவகாரத்தில்  முன்னோடிகளாக இருப்பவர்கள் தாமரை கட்சி நிர்வாகிகளாம். வடநாட்டு  மார்வாடிகளுக்கு நண்பர்களாக இருந்து ஜீ என்று அழைக்கப்படும் இவர்கள்,   தொழிலுக்கு ஊக்கமூட்டுவதோடு  விற்பனையிலும் கல்லா கட்டுகிறார்களாம்.  சமீபத்தில் தம்மம்பட்டியில் தாமரை நிர்வாகி ஒருவர் காரோடு சிக்கியது இதை  அம்பலப்படுத்தி விட்டதாம். லட்சுமி, விநாயக், கிஷன் என்று  மறைமுக பெயரை  வைத்தே கடைகளில் கனஜோராக நடந்து  கொண்டிருந்ததாம். போலீசாரின் தற்போதைய  அதிரடி இதற்கு ஆப்பு வைச்சிருக்காம். இதனால் பத்து ஆண்டுகளாக வருமானம்  சுளையாக லாபம் பார்த்த ஜீக்கள் எல்லாம் இப்போ கலக்கத்தில் இருக்காங்களாம்’’  என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

 • iceland-16

  ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

 • dolphins-15

  டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்