SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அழிவின் விளிம்பில் கொடை ஆப்பிள்-பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

2021-07-30@ 14:07:37

கொடைக்கானல் : கொடைக்கானலில் அழிவின் விளிம்பில் உள்ள ஆப்பிள் விவசாயத்தை பாதுகாக்க தோட்டக்கலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கொடைக்கானல் பாம்பார்புரம், அப்சர்வேட்டரி பகுதியில் ஆப்பிள் பயிரிடப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் ஆப்பிள் பயிரிடப்பட்டது. ஆனால் கட்டிடங்கள் பெருக்கம், சுற்றுச்சூழல் மாற்றம், அன்னிய மரங்கள் ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலே ஆப்பிள் மரங்கள் உள்ளன.இதே நிலை நீடித்தால் கொடை ஆப்பிள் விரைவில் அழிந்து விடும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘புளிப்பும், இனிப்பும் நிறைந்த கொடை ஆப்பிள் அழிவின் விளிம்பு நிலையில் உள்ளது. எனவே கொடை ஆப்பிள் மகசூலை அதிகரிக்க தோட்டக்கலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.தற்போது கொடைக்கானலில் ஆப்பிள் மகசூல் துவங்கியுள்ளது. ஒரு கிலோ ஆப்பிள் ரூ.150 வரை விற்கப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • cycle_sephiee1

    முட்டுக்காடு டூ மாமல்லபுரம்.. முதல்வர் ஸ்டாலின் உற்சாக சைக்கிள் பயணம்.. மக்களோடு டீ குடித்து அசத்தல்; செல்பி எடுத்து மகிழ்ந்தார்!!

  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்