SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கன்னிவாடியில் கம்பி தெரியும் டிரான்ஸ்பார்மர்-மாற்ற கோரிக்கை

2021-07-30@ 14:06:30

சின்னாளபட்டி : ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடியில் புதுப்பட்டி செல்லும் வழியில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. மின்வாரிய அலுவலகம் முன்பு 2 டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. அவற்றில் ஒரு டிரான்ஸ்பார்மரின் கம்பத்தில் கான்கிரீட் பெயர்ந்து, கம்பிகள் வெளியில் நீட்டியபடி காட்சியளிக்கின்றன.

கனமழை மற்றும் சூறை காற்றுக்கு மடிரான்ஸ்பார்மர் கீழே விழுந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. ஏதேனும் விபரீதம் நிகழும் முன்பு, சேதமடைந்த கான்கிரீட் கம்பத்தை அகற்றி, புதிய கான்கிரீட் கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘புதிய மின்கம்பங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. விரைவில் சேதமடைந்த கான்கிரீட் கம்பங்களை அகற்றிவிடடு, புதிய கம்பம் அமைக்கப்படும்’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • cycle_sephiee1

    முட்டுக்காடு டூ மாமல்லபுரம்.. முதல்வர் ஸ்டாலின் உற்சாக சைக்கிள் பயணம்.. மக்களோடு டீ குடித்து அசத்தல்; செல்பி எடுத்து மகிழ்ந்தார்!!

  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்