SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெப்பக்குளம் தூர்வாரும் பணி தீவிரம்- பழநி கோயில் நிர்வாகம் நடவடிக்கை

2021-07-30@ 14:05:03

பழநி : தமிழக புராதன கோயில்களுக்கு உற்சவர், ஸ்தல விருட்சம், குளம் போன்றவை இருக்கும். இதன்படி பழநி திருஆவினன்குடி கோயிலுக்கு சரவணப்பொய்கை, மலைக்கோயிலுக்கு பிரம்ம தீர்த்தமும் உள்ளது. இதுபோல் மலைக்கோயில் இடும்பன் சன்னதியின் அருகில் உள்ள குறவடிவேலர் சன்னதிக்கு மேற்கு கிரிவீதியில் சுற்றுலா பஸ்நிலைய வளாகத்தில் குறவர் தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளம் போதிய பராமரிப்பின்றி குப்பைகள், புதர்கள் மண்டி கிடந்தது. கடந்த மாதம் பழநி கோயில்களில் ஆய்வு மேற்கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெப்பக்குளத்தை தூய்மைப்படுத்த உத்தரவிட்டார்.

இதன்படி தற்போது கோயில் நிர்வாகத்தின் மூலம் தெப்பக்குளம் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. குளத்தில் கிடந்த குப்பைகள், அமலைச்செடிகள் போன்றவை அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. 10 நாட்களுக்குள் குளம் தூர்வாரப்படுமென கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்பணிகளை பழநி கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் செந்தில்குமார் மேற்பார்வையிட்டு வருகின்றனர். நீண்ட நாள் கோரிக்கையான தெப்பக்குளம் தூர்வாரும் பணி தற்போது துவங்கி உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • cycle_sephiee1

    முட்டுக்காடு டூ மாமல்லபுரம்.. முதல்வர் ஸ்டாலின் உற்சாக சைக்கிள் பயணம்.. மக்களோடு டீ குடித்து அசத்தல்; செல்பி எடுத்து மகிழ்ந்தார்!!

  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்