SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போடி பகுதியில் வீரகாளியம்மன் கோயிலை இடிக்க எதிர்ப்பு-பொதுமக்கள் முற்றுகை

2021-07-30@ 12:48:32

போடி : போடி 33வது பகுதியில் உள்ள சுப்புராஜ் நகர் புதுகாலனி பகுதியில் ரயில்வே ட்ராக் அருகில் வீரகாளியம்மன் கோயில் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயிலில் பக்தர்கள் பொங்கல் வைத்து பூஜை செய்து வழிபட்டு வந்தனர். இந்நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த குபேந்திரன் என்பவர் இக்கோயில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு  கட்டப்பட்டுள்ளதாகவும், இதனால் போக்குவரத்திற்கு நெருக்கடி ஏற்படுவதாகவும், மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயிலை இடித்து போக்குவரத்து நெருக்கடியை சரிசெய்யுமாறு உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவின்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயிலை இடிக்க சென்ற நகராட்சி அதிகாரிகளிடம், அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை தொடர்ந்து 2 மாத காலஅவகாசம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அந்த 2 மாத காலஅவகாசம் முடிந்து நேற்று போடி நகராட்சி கமிஷனர் ஷகிலா, தாசில்தார் செந்தில்முருகன் தலைமையில் போடி நகர் போலீசார் ஜேசிபி இயந்திரத்துடன் கோயிலை இடிக்க சென்றனர். அப்போது, அப்பகுதி மக்கள் கோயிலை இடிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டதில் ஈடுபட்டனர். இதற்கிடையே பொதுமக்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 3 மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டதால், அதற்கு உடன்பட்டு மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • cycle_sephiee1

    முட்டுக்காடு டூ மாமல்லபுரம்.. முதல்வர் ஸ்டாலின் உற்சாக சைக்கிள் பயணம்.. மக்களோடு டீ குடித்து அசத்தல்; செல்பி எடுத்து மகிழ்ந்தார்!!

  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்