SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்று உலக புலிகள் தினம் புலிகளின் உணவு தேவையை பூர்த்தி செய்ய வலியுறுத்தல்

2021-07-29@ 12:02:01

ஊட்டி : இன்று உலக புலிகள் தினம் கொண்டாடப்படும் நிலையில், புலிகளின் இரை விலங்குகளான தாவர உன்னிகளின் உணவான புற்கள், செடி கொடிகளை அதிகரிக்க களை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஊட்டி அரசு கலை கல்லூரி வன விலங்கு உயிரியல் துறை உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் ஆகிய 4 புலிகள் காப்பங்கள் உள்ளன.

நீலகிரி உயிர்சூழல் மண்டலம், மேற்குதொடர்ச்சி மற்றும் கிழக்குெதாடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நாகர்ஹோலே, பந்திப்பூர், முதுமலை, பிளிகிரிரங்கா, சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்கள், வயநாடு வன சரணாலயம் ஆகிய பகுதிகளில் ஆசியாவிலேயே அதிக புலிகள் கொண்ட நிலப்பரப்பாக உள்ளது.
இங்கு பாதுகாப்பாக வாழ்விடங்கள், கணிசமான இரைவிலங்குகள் உள்ளன. புலிகளை பாதுகாப்பதால் அதனுடன் சேர்ந்து அதனுடைய இரை விலங்குகளான மான், புள்ளிமான்கள், காட்டெருது போன்றவை பாதுகாக்கப்படுகின்றன. அவை சாப்பிட கூடிய வனப் பரப்பும் பாதுகாக்கப்படுகிறது. எனவே, புலிகள் பாதுகாப்பது அவசியமாகிறது.

புலிகளை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 29ம் தேதி உலக புலிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. வனப்பரப்பு ஆக்கிரமிப்பு, புலிகள் வாழ்விடங்கள் சுருங்கிய நிலையில், தொடர் கண்காணிப்பு காரணமாக  புலிகள் எண்ணிக்கை வெகுவாக அதிகாித்து 2018 கணக்கெடுப்பின் படி தற்ேபாது 2967 புலிகள் உள்ளன.

தமிழகத்தில் உள்ள 4 புலிகள் காப்பகங்களிலும் 260க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளன. புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில் அவற்றின் வாழ்விடங்களான வனப்பரப்பு அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே, எதிர்காலத்தில் புலிகளுக்கான காரிடர் (வழித்தடம்) கண்டறிந்து அவற்றை பாதுகாக்க வேண்டும்.

புலிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இரை விலங்குகளை பெருக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வனப்பகுதிகளில் உள்ள லேண்டனா போன்ற களை தாவரங்களால், தாவர உன்னிகளின் உணவான புற்கள் போன்றவற்றின் வளர்ச்சியை பெருமளவு பாதிக்கிறது. எனவே, களை செடிகளை அகற்றிவிட்டு தாவர உன்னிகளுக்கு ஏற்ற புற்கள் போன்றவற்றை வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்