SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

15 ஆண்டுகளுக்கு பிறகு திசையன்விளையில் இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றம்: போலீஸ் பாதுகாப்பு

2021-07-28@ 20:03:50

திசையன்விளை: திசையன்விளையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது. இதில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 2 குழுக்களாக பிரிந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை, வளர்ந்துவரும் நகரமாகும். கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் திசையன்விளை தனித்தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சுற்றுவட்டார பகுதி மக்கள், அத்யாவசிய தேவைக்காக திசையன்விளைக்கு வந்து செல்கின்றனர். மேலும் கல்வி, மருத்துவம், தொழில் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்களும் திசையன்விளைக்கு நாள்தோறும் வந்து செல்லும் நிலை உள்ளது.

இதனிடையே மக்கள் நடமாட்டம் அதிகம் காரணமாக திசையன்விளையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக திசையன்விளை காவல் நிலைய ரோடு, பழைய பேருந்து நிலையம், மெயின்பஜார், உடன்குடி ரோடு, இட்டமொழி-நவ்லடி ரோடு உள்ளிட்ட இடங்களில் சாலையின் இருபுறங்களில் ஆக்கிரமிப்புகள் காரணமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில் திசையன்விளையில் இன்று காலை 8 மணி அளவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது.

தாசில்தார் செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுந்தர், திசையன்விளை  இன்ஸ்பெக்டர்  ஜமால், உவரி  இன்ஸ்பெக்டர் செல்வி, வருவாய் ஆய்வாளர்  துரைச்சாமி, விஓஓக்கள் குமார், செல்வகுமார், மாரியப்பன், மகா  அரிச்சந்திரன், ஜேம்ஸ், பரமசிவன், அய்யாதுரை, ஆவுடையப்பன் மற்றும்   நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் வெங்கடேஸ்வரன், இளநிலை பொறியாளர்  சிவசண்முகநாதன், தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜா தலைமையில் வீரர்கள், நில  அளவை தலைமை துணை ஆய்வாளர் ஸ்டீபன் மற்றும் சர்வேயர்கள் மேரி, மாரிராஜன் மற்றும் போலீசார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

ஒரு குழுவினர் பழைய பேருந்து நிலையம் முதல் உடன்குடி சாலை வரையிலும், மற்றொரு குழுவினர் மெயின்பஜாரிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஜேசிபி மற்றும் டிராக்டர்கள் மூலம் கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன. சுமார் 15 ஆண்டுக்கு பின் தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

 • iceland-16

  ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

 • dolphins-15

  டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

 • anna-15

  பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

 • gujarat-14

  கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்